ஸ்பெஷல்

துபாய் அரசர் தன் 6-வது மனைவிக்கு கொடுக்கும் ஜீவனாம்சம்: லண்டன் நீதிமன்றம் உத்தரவு!

கல்கி

துபாய் அரசர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், தன் 6-வது மனைவி ஹயா பின்த் அல் ஹுசைனை விவாகரத்து செய்ய லண்டன் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து அவர் தன் 6-வது மனைவிக்கு 550 மில்லியன் பவுண்ட் (இந்திய மதிப்பில் 55,40,99,70,000 கோடி ரூபாய்) ஜீவானம்சமாக கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நீதிமன்ற வரலாற்றிலேயே இதுதான் மிகப் பெரிய ஜிவனாம்சம் என்று நீதிபதி குறிப்பிட்டார்

இங்கிலாந்து நீதிமன்றத்தில் இந்த விவாகரத்து குறித்து வெளியான தகவல்:

துபாய் அரசர் முகமது பின் ரஷித் அல் மக்தூம்  தன் 6-வது மனைவியை 2004-ம் ஆண்டு திருமணம் முடித்து இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். துபாய் அரசர் அந்த மனைவி குழந்தைகளை அவர்கள் விருப்பத்துக்கு மாறாக துபாய்க்கு அழைத்து வந்ததாகச் சொல்லப்ப்டுகிறது. இதையடுத்து அவர் மனைவியான ஹயா பின்த் அல் ஹுசைன் தன் 2 குழந்தைகளுடன் 2019-ல் இங்கிலாந்துக்கு வந்து, அங்குள்ள நீதிமன்றத்தில் தன் கணவர்மீது வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 2 ஆண்டுகளாக இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. மனைவியான ஹயா பின்த் அல் ஹுசைன் சொல்வது அனைத்தும், உண்மை என்பது தெரியவந்துள்ளது.

-இவ்வாறு இங்கிலாந்து நீதிமன்றம் தகவல் வெளியிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையில் நீதிபத் வழங்கிய அதிரடி தீர்ப்பில் தெரிவிக்கப் பட்டதாவது:

துபாய் அரசர் மற்றும் அவரது இந்த 6-வது மனைவிக்கு இங்கிலாந்து நீதிமன்றம் விவாரத்து தீர்ப்பளிக்கிறது. மேலும் இளவரசி மற்றும் அவரது 2 குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அந்த வகையில் துபாய் அரசர் தன் 6-வது மனைவிக்கு 550 மில்லியன் பவுண்ட் (இந்திய மதிப்பில் 55,40,99,70,000 கோடி ரூபாய்) ஜீவானம்சமாக கொடுக்க வேண்டும்.

-இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து வரலாற்றிலே இது தான் மிகப் பெரிய ஜீவானம்சம் தொகையாக கருதப்படுகிறது.

விஜய் தேவரகொண்டாவின் அடுத்தப் படத்தின் அப்டேட்!

இடி, மின்னலை முன் கூட்டியே உணர்த்தும் 'தாமினி' செயலி!

அக்னி நட்சத்திர வெயிலை சமாளிக்க வெட்டிவேரை இப்படிப் பயன்படுத்தலாமே!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பயோபிக்கில் விஷால்… இது லிஸ்ட்லையே இல்லையேபா!

பஜாஜ் பல்சரின் 400 சிசி புதிய பைக் அறிமுகம்: இனிமே செம ஸ்பீடு தான்!

SCROLL FOR NEXT