Gandhiji with Rajaji... Image credit - kalki group
ஸ்பெஷல்

காந்திஜிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள சுவாரஸ்யமான தொடர்புகள்..!

அக்டோபர் 2 -காந்தி ஜெயந்தி!

கோவீ.ராஜேந்திரன்

ரெளலட் சட்டத்தை எதிர்க்க சத்தியாக்கிரக எண்ணம் காந்திஜி கனவில் உருவாகியது. தமிழ்நாட்டில் அதுவும் சென்னையில்தான். அச்சமயம்தான் பாரதியாரையும் ராஜாஜியையும் முதன்முதலாகச் சந்தித்தார். தன் மகன் தேவதாசுக்கு ராஜாஜி மகள் லட்சுமியை மணம் புரிவித்தார்.

மக்கள் போதியளவு உடை இல்லாமல் கஷ்டப்படுவதைக் கண்டு ஒரே ஆடை உடுத்துவது (அரை நிர்வாண பக்கிரி) என்கிற விரதத்தை மேற்கொண்டது. தமிழ்நாட்டில் மதுரையில்தான்.

காந்திஜியின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட முதல் ஆசிரமம் 1923 ம் ஆண்டு சிறாவயல் கிராமத்தில் ப. ஜீவானந்தம் ஆரம்பித்தது தான். காந்திஜிக்குப் பிரியமான மதுவிலக்கை இந்தியாவிலேயே முதன் முதலாக அமல்படுத்தியது தமிழ் நாடுதான்.

காந்திஜியைப் பற்றிய முதல் டாகுமெண்டரி சினிமாப் படம் எடுத்தவர். உலகம் சுற்றிய தமிழர் என்று புகழப்படும் திரு. ஏ. கே. செட்டியார்.

தமிழ்த் தாத்தா உ. வே சாமிநாதையரும் காந்திஜியும் 1934 -ல் ஒரே மேடையில் பேசினார்கள். "உங்கள் சிஷ்யனாக இருந்து தமிழ் கற்க பாக்கியம் செய்யவில்லையே" என்ற குறையைக் காந்திஜி தெரிவித்தார்.

காந்திஜி போற்றிய கிராமம் கோயமுத்தூரைச் சேர்ந்த "கலங்கல் " இதற்காக மகாத்மாவின் பாராட்டை பெற்றவர் "சுப்ரி" எனும் சுப்பிரமணியம்.

காந்திஜி உயிருடன் இருக்கும்போதே அவருக்கு சிலை வைத்த பெருமை தமிழ் நாட்டில் உள்ள கொங்கு மண்ணுக்கு சொந்தம். ஈரோடு நகரில் 1927 ம் ஆண்டு ஏப்ரல் 9 ம் தேதி திறக்கப்பட்டதுதான். இந்தியாவில் காந்திஜிக்கு வைக்கப்பட்ட முதல் சிலை.

காந்திஜிக்கு கோயில் கட்டி வழிபட்டது தமிழ்நாடுதான். இந்தியாவில் காந்திஜிக்கு கட்டப்பட்ட முதல் கோயில் ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடி அருகிலுள்ள சொந்தம் பாளையம் என்ற கிராமத்தில்தான். காந்திஜி பாராட்டைப் பெற்ற முதல் தமிழ்த் தொழிலாளர் தலைவர் திரு. வி. க (கல்யாண சுந்தர முதலியார்)

தனக்கு பிடித்த கீத இசை திருமதி எம். எஸ் சுப்புலட்சுமி பாடிய "வைஷ்ணவ ஜனதோ" தான். இந்த கீத இசையில் தன் மனதை லயிக்கச் செய்வதில் ஒர் அலாதி இன்பம். என்று காந்திஜியே குறிப்பிட்டுள்ளார்.

காந்திஜி பெயரிலேயே ஒரு பத்திரிகை நடத்தி அதற்கு காலணா விலை வைத்தவர். திரு டி. எஸ். சொக்கலிங்கம். காந்திஜியின் கட்டுரைகளையும், புத்தகங்களையும் மலிவு விலையில் முதல் முறையாக தமிழகமெங்கும் கிடைக்கச் செய்தவர்கள் சங்கு கணேசனும், ஜி. ஏ. நடேசனும்தான்.

தமிழ்நாட்டில் 203 நாட்கள் காந்திஜி இருந்துள்ளார். அதில் 13 நாட்கள் திருச்சியில் இருந்துள்ளார். 1927ம் ஆண்டு செப்டம்பர் 17 ந்தேதி திருச்சியில் தன்னுடைய பெயரில் அமைந்த காந்தி மார்கெட்டுக்கு மகாத்மா காந்திஜியே அடிக்கல் நாட்டினார்.

மகாத்மா காந்தி தனக்கு ஓய்வு கிடைக்கும் நேரத்தில் எல்லாம் தமிழ் கற்றுக்கொண்டார். தமிழ்நாட்டில் இருந்த யாருக்காவது கடிதம் எழுதினால் தமிழிலேயே கையெழுத்து போடுவார். காந்திக்கு தமிழ் மொழி எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்தவர் சேவா கிராமத்தில் இருந்த திரு. திரு சங்கரன் என்பவர்.

தமிழ் மொழி பற்றி காந்திஜி குறிப்பிட்டது.

"சுதந்திர போராட்டத்தில் தமிழர்கள் பெற்ற பங்கைப் போல வேறு எந்த சமூகத்தினரும் அவ்வளவு செய்திருக்கவில்லை. " ஆகையால் வேறு காரணங்களுக்கு அல்ல என்றாலும் தமிழர்களுக்கு என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளவாவது தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினேன். தமிழைப் படிக்க படிக்க இம்மொழியின் அழகை நன்றாக அறியலானேன். அது கவர்ச்சி தரும் இனிய மொழி. இந்தியா ஒரே தேசிய இனமாக இருக்க வேண்டும் என்றால் சென்னை மாகாணத்திற்கு வெளியில் வசிப்பவர்களும் தமிழைக் கற்றுக் கொள்ள வேண்டும். "

மகாத்மா காந்தி முதன்முதலாக "யங் இந்தியா" ( young india) என்ற ஆங்கில பத்திரிகையை ஆரம்பித்ததும், அதை ஆங்கிலத்தில் நடத்த வேண்டியதிற்கும் காரணம் கூறும்போதே "இப்பத்திரிகையை மதராஸ் மாகாணத்தில் உள்ளோர் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்காகத்தான் ஆங்கிலத்தில் நடத்துகிறேன்" என்று விளக்கம் கூறினார்.

அதேபோல் அப்பத்திரிகை இதழின் முதல் பிரதியை சென்னையில் உள்ள மகா கனம் சீனிவாச சாஸ்திரிக்கு அனுப்பி அதில் ஏதாவது பிழைகள் இருந்தால் திருத்தம் செய்து அனுப்புமாறு கேட்டிருந்தார். சீனிவாச சாஸ்திரியும் அந்த முதல் இதழில் ஆறு இடங்களில் பிழைகள் இருப்பதை சுட்டிக் காட்டி காந்திஜிக்கு அனுப்பி வைத்தார்.

சின்னத்திரையில் அறிமுகமாகவிருக்கும் கௌதமி… எந்த சீரியலில் தெரியும்?

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

SCROLL FOR NEXT