ஸ்பெஷல்

தேச துரோக வழக்கு பதிய இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு!

கல்கி

தேசத் துரோக வழக்குகளைப் பதிவு செய்யும் 124-A சட்டப்பிரிவை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த சட்டப் பிரிவை அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்தி தனிநபர்கள் அச்சுறுத்த படுவதாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. 

அப்போது, மத்திய அரசு தரப்பில், தேச துரோக வழக்கு குறித்த சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்ய கால் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. 

இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்ததாவது:

தேசத் துரோக சட்டப்பிரிவு 124- A  விதிகளை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு அனுமதி அளிக்கப் படுகிறது. அப்படி மறு ஆய்வு செய்யும்வரை இந்த சட்டப் பிரிவின்கீழ் எந்த  வழக்கும் பதிவு செய்யக்கூடாது. விசாரிக்க கூடாது.

மேலும் இதுதொடர்பாக  நிலுவையில் உள்ள வழக்குகள், மேல்முறையீடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பான நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க வேண்டும். 

-இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

SCROLL FOR NEXT