ஸ்பெஷல்

பாகிஸ்தானின் புதிய பிரதமரானார் ஷபாஸ் ஷெரீப்: அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கல்கி

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதையடுத்து  இம்ரான்கான் இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் பதவியை இம்ரான்கான் ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவரான ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு, நேற்று பதவியேற்றார்.

இந்நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமரான ஷபாஸ் ஷெரீப்பிற்கு இந்திய பிரதமர் நரேந்திர  மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:

பாகிஸ்தான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷபாஸ் ஷெரீப்பிற்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பயங்கரவாதம் இல்லாத, அமைதியான, நிலைத்தன்மை கொண்ட பிராந்தியத்தை இந்தியா விரும்புகிறது. ஆகையால், நமது நாட்டின் வளர்ச்சிக்கான சவால்களை கவனத்தில் கொண்டு நமது நாட்டு மக்களின் நல்வாழ்வு மற்றும் வளமான வளர்ச்சியை உறுதிபடுத்துவோம்.

-இவ்வாறு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

வாழ்வை அழகாக்கும் அர்த்தமுள்ள சின்ன (பெரிய) விஷயங்கள்!

மூளை ஆரோக்கியத்திற்குத் தேவையான முதன்மை உணவு!

குறமகள் வள்ளி குகை எங்கு இருக்கு தெரியுமா?

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வந்த வரலாறு தெரியுமா?

சிறுகதை - அகழாய்வில் ஓர் அதிசயம்!

SCROLL FOR NEXT