ஸ்பெஷல்

தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் தொடக்கம்: படகுகள் கரையில் அணிவகுப்பு!

கல்கி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றுமுதல் 60 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளதால், கடலோரப் பகுதிகளில்  மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கிழக்கு ஆழ்கடல் பகுதிகளில் மீன்களின் இனபெருக்க காலத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் 60 நாட்கள் விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கபட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது. இதையடுத்து விசைப்படகுகள் மூலமாக மீன் பிடிக்க கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு அனுமதி சீட்டு அளிக்கப்படுவது நிறுத்தபட்டது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 400 விசைப்படகுகளை மீனவர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். இதேபோல, தமிழகம் மற்றூம் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்தியுள்ளனர். இந்த தடைக் காலத்தில் மீனவர்கள் தங்கள் மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்களை பழுது பார்க்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

'கெவ்ரா வாட்டரில்' இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

அதிக நேரம் AC-யில் இருக்காதீங்க ப்ளீஸ்… மீறி இருந்தா? அச்சச்சோ! 

இந்த 7 சொற்றொடர்களைப் பயன்படுத்தினால் நீங்களும் ஒரு புத்திசாலி பெண்தான்!

Cape Rain Frog: வித்தியாசமான தென்னாப்பிரிக்க தவளை இனம்! 

விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

SCROLL FOR NEXT