ஸ்பெஷல்

பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா; அமுதா ஐஏஎஸ் தீமிதித்து நேர்த்திக் கடன்!

கல்கி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியில் உள்ள பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் இன்று அமுதா ஐஏஸ் உட்பட ஏராளமான  பக்தர்கள் தீ குண்டத்தில் நடந்து சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர்.

பண்ணாரி அம்மன் கோவிலில் கடந்த 7-ம் தேதி பூச்சாட்டுதலுடன் குண்டம் திருவிழா தொடங்கியது. அதனை தொடர்ந்து சப்பரத்தில் எழுந்தருளிய அம்மன், சுற்றுவட்டாரங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு திருவீதி உலா எடுத்து செல்லப்பட்டது. பின்னர் கடந்த 15-ம் தேதி திருவீதி உலா கோவிலை வந்தடைந்ததும் கம்பம் நடப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் விழாவில் பங்கேற்க கடந்த இரண்டு நாட்களாக பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். பண்ணாரி அம்மன் வீணையுடன் தங்க காப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இன்று அதிகாலை 4.00 மணிக்கு படைக்கலத்துடன் திருக்குளம் சென்று அங்குள்ள சருகுமாரியம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு, தாரை தப்பட்டை முழங்க, மேளதாளங்களுடன் அலங்கரிக்கப் பட்ட சப்பரத்தில் அம்மன் உற்சவர் குண்டத்துக்கு அழைத்து வரப்பட்டது.

உற்சவர் சிலை சருகு மாரியம்மன் கோவிலில் இருந்து பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வரப்பட்டது. பின்னர் கோவில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த குண்டத்திற்கு பூஜைகள் செய்துவிட்டு, முதல் நபராக பூசாரி  குண்டம் இறங்கினார். இதனை தொடர்ந்து, காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர். அதிகாலை தொடங்கிய குண்டம் விழாவில் இன்று மாலை வரை தொடர்ந்து சுமார் 12 மணி நேரத்திற்கு பக்தர்கள் குண்டம் இறங்க உள்ளனர். வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக கால்நடைகளையும் குண்டத்தில் இறக்கி அழைத்து வருவது வழக்கம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரனோ பரவலால் பண்ணாரி குண்டம் விழா நடைபெறாமல் இருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு குண்டம் விழா நடைபெறுகிறது..

இதில், தமிழகம் மட்டுமன்றி கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்.  இதையடுத்து சுமார் 1500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி சந்தோஷமாக வாழ்வோம்!

அப்பர் மிடில் கிளாஸ் மக்கள் இவங்கதானா?

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

SCROLL FOR NEXT