ஸ்பெஷல்

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்: தினமும் 10 ஆயிரம் டாலர் அபராதம் கட்ட உத்தரவு! 

கல்கி

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட்  ட்ரம்ப் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னணி தொழிலதிபராக விளங்குகிறார். இந்நிலையில் அவரது தொழில் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு நியூயார்க்  நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இவற்றை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டும், ட்ரம்ப் தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாததால், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சுமத்தப்பட்டது.

இதையடுத்து நியூயார்க் நீதிமன்றம் டிரம்புக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அரசு வழக்கறிஞர் தெரிவித்ததாவது:

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு இரு முறை கால அவகாசம் நீட்டிக்கப் பட்டும், அவர் ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்கவில்லை. அதனால் அவர் அவற்றை தாக்கல் செய்யும் வரை தினமும் 10 ஆயிரம் டாலர் அபராதம் கட்ட வேண்டும் என்று அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை டிரம்ப்  செயல்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதே தவிர அவரை தண்டிப்பதற்காக அல்ல. 

-இவ்வாறு நியூயார்க் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து ட்ரம்ப் மேல்முறையீடு செய்வார் என அவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிக நேரம் AC-யில் இருக்காதீங்க ப்ளீஸ்… மீறி இருந்தா? அச்சச்சோ! 

இந்த 7 சொற்றொடர்களைப் பயன்படுத்தினால் நீங்களும் ஒரு புத்திசாலி பெண்தான்!

Cape Rain Frog: வித்தியாசமான தென்னாப்பிரிக்க தவளை இனம்! 

விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் இதுதான்: மாஸாக வெளியான டைட்டில்!

SCROLL FOR NEXT