ஸ்பெஷல்

இலங்கைக்கு உதவ அனுமதி தேவை: மத்திய அரசுக்கு தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்!

கல்கி

தமிழகத்திலிருந்து இலங்கை மக்களுக்கு உதவ மத்திய அரசின் அனுமதி கோரி இன்று  சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து முன்மொழிந்து சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அந்நாட்டுக்கு தமிழக அரசு உதவுவதற்கு அனுமதி கோரி மத்திய அரசிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை மத்திய அரசிடமிருந்து பதில் கிடைக்கப் பெறவில்லை. தமிழகத்திலிருந்து ரூ.25 கோடி மதிப்பிலான அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட உதவி பொருள்களை அனுப்பி வைக்க மத்திய அரசின் அனுமதி தேவை. இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் விருப்பம்.

-இவ்வாறு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த பிறகு,  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரங்கன் விரும்பும் விருப்பன் திருநாள்!

வாழ்வை அழகாக்கும் அர்த்தமுள்ள சின்ன (பெரிய) விஷயங்கள்!

மூளை ஆரோக்கியத்திற்குத் தேவையான முதன்மை உணவு!

குறமகள் வள்ளி குகை எங்கு இருக்கு தெரியுமா?

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வந்த வரலாறு தெரியுமா?

SCROLL FOR NEXT