ஸ்பெஷல்

மகாராஷ்டிராவில் 6 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று; அரசு அறிவிப்பு!

கல்கி

மகாராஷ்டிராவில் வெளிநாட்டிலிருந்து வந்த 6 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் மும்பை விமான நிலையத்தில் ஒமிக்ரான் கொரோனா தடுப்பு பற்றி மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மேயர் கிஷோரி பட்னாகர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

மும்பை விமான நிலையத்தில் வந்து இறங்கும் ஒவ்வொரு பயணியையும் பரிசோதனை செய்கிறோம் என்று அதிகாரிகள் என்னிடம் கூறினர். பயணிகளை தனிமைப்படுத்துதலுக்கு அனுப்பி வைக்கிறோம். மும்பையில் ஒமிக்ரான் பாதிப்பு இதுவரை இல்லை. எனினும், தென்ஆப்பிரிக்கா அல்லது ஒமிக்ரான் ஆபத்து நிறைந்த பிற நாடுகளில் இருந்து மராட்டியத்திற்கு வந்த 6 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என மராட்டிய பொது சுகாதார துறை தெரிவித்து உள்ளது. அவர்கள் அறிகுறிகள் அற்றவர்களாகவோ அல்லது லேசான அறிகுறிகளை கொண்டவர்களாகவோ இருக்கின்றனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணியும் நடந்து வருகிறது.

இவ்வாறு மும்பை மேயர் தெரிவித்தார்.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT