ஸ்பெஷல்

நீங்கள் அமருங்கள்.. இங்கு நான்தான் பொறுப்பு: பிரிட்டன் பிரதமருக்கு சபாநாயகர் அதிரடி!

கல்கி

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற விவாதத்தின்போது பிரதமர் போரிஸ் ஜான்சன் குறுக்கிட்டுப் பேசியபோது, சபாநாயகர் லிண்ட்சே ஹோய்ல் அதிரடியாக ''நீங்கள் நாட்டுக்கு பிரதமராக இருக்கலாம் இந்த அவைக்கு நான் தான் பொறுப்பு எனவே உட்காருங்கள்'' என கூறி அமர வைத்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் ஆளுங்கட்சி எம்.பி.க்கள் மீது முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி பேசின. அப்போது எதிர்க்கட்சி தலைவர் சர் கீர் ஸ்டார்மர் பல குற்றச்சாட்டுகளை பிரிட்டன் பிரதமர் மீது வைத்து பேசினார். அப்போது, பிரதமர் போரிஸ் ஜான்சன் குறுக்கிட்டுப் பேச முயன்றபோது சபாநாயகர் லிண்ட்சே ஹோய்ல் அதிரடியாகக் கூறியதாவது:

எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பிரதமரான நீங்கள் பதிலளிக்க வேண்டிய நேரம், இது. ஆனால், உங்கள் கேள்விக்கு எதிர்க்கட்சிகள் பதிலளிக்கக்கூடிய நேரம் அல்ல. ஆகவே, நீங்கள் அமருங்கள். நீங்கள் இந்த நாட்டின் பிரதமராக இருக்கலாம் ஆனால் இந்த சபைக்கு நான்தான் பொறுப்பு.

இவ்வாறு பிரிட்டன் சபாநாயகர் அதிரடியாகத் தெரிவித்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'கெவ்ரா வாட்டரில்' இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

அதிக நேரம் AC-யில் இருக்காதீங்க ப்ளீஸ்… மீறி இருந்தா? அச்சச்சோ! 

இந்த 7 சொற்றொடர்களைப் பயன்படுத்தினால் நீங்களும் ஒரு புத்திசாலி பெண்தான்!

Cape Rain Frog: வித்தியாசமான தென்னாப்பிரிக்க தவளை இனம்! 

விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

SCROLL FOR NEXT