ஸ்பெஷல்

பிரபல கதக் நடனக் கலைஞர் பிர்ஜூ மகராஜ் மறைவு: பிரதமர் மோடி, கமல்ஹாசன் இரங்கல்!

கல்கி

உலகப் புகழ் பெற்ற கதக் நடன கலைஞரான பிர்ஜு மகாராஜ் (வயது 83) நேற்றிரவு டெல்லியில் உடல் நலக் குறைவால் காலமானார்.

நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற பிர்ஜு மகாராஜ், நேற்றிரவு டெல்லியில் தனது வீட்டில் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, மற்றூம் கமல்ஹாசன் உள்ளீட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது;

உலகம் முழுவதும் இந்திய நடனக் கலைக்கு தனித்துவமான அங்கீகாரத்தை பெற்றுத் தந்தவர் பண்டிட் பிர்ஜு மகராஜ் . அவரது மறைவு ஒட்டுமொத்த கலையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு.இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் தன் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதாவது;

ஈடு இணையற்ற நடனக் கலைஞரான பண்டிட் பிர்ஜூ மகராஜிடமிருந்து ஓர் ஏகலைவனைப் போல தொலைவில் இருந்தும், விஸ்வரூபம் படத்திற்காக அருகிலிருந்தும் நான் கற்றுக்கொண்டவை ஏராளம்.இசைக்கும் நாட்டியத்திற்கும் தன் ஆயுளை அர்ப்பணித்துக்கொண்டவரே, 'உன்னை காணாது நான் இன்று நானில்லையே'" என்று ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கதக் நடன கலைஞர் பிர்ஜு மகாராஜ் நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்த விஸ்வரூபம் படத்தில் உன்னை காணாத நான் இன்று நானில்லையே என்ற பாடலுக்கு நடன வடிவமைப்பு செய்தவர் என்பது குறீப்பிடத்தக்கது.

30 வயதிற்கு மேற்பட்ட பெண்ணா நீங்கள்? இதோ உங்களுக்கான சருமப் பராமரிப்பு குறிப்புகள்! 

பாராமதி தொகுதியில் மோதும் பவார் குடும்பத்து மகளும், மருமகளும்!

முருங்கைக்காய் மற்றும் முருங்கைப்பூ ரெசிபிஸ்!

கடலுக்கு நடுவே ஒரு நவபாஷாண நவக்கிரக கோயில்! எங்கிருக்கிறது தெரியுமா?

MI vs SRH: வான்கடே மைதானத்தில் இன்று பலபரீட்சை… வெல்லப்போவது யார்?

SCROLL FOR NEXT