ஸ்பெஷல்

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியாஅபார வெற்றி!

கல்கி

துபாயில் நேற்றிரவு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வென்று ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது.

முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.முதலில் பேட் செய்த நியூசிலாந்து 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு172 ரன்கள் எடுத்தது.

அடுத்து பேட்டிங்கில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன் பிஞ்ச் 5 ரன்கள் மட்டும் எடுத்து டிரன்ட் போல்ட் பந்துவீச்சில் நடையைக் கட்டினார். அடுத்து டேவிட் வார்னர் 38 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து மிட்செல் மார்ஷ் 77, மேக்ஸ்வெல் 28 ஜோடி சிறப்பாக விளையாடியதால்,ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவர்களில் 173 ரன்கள் சேர்த்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று, கோப்பையை கைப்பற்றியது.ஆஸ்திரேலியா அணி டி20 உலக கோப்பையை கைப்பற்றியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத் தக்கது.

அரங்கன் விரும்பும் விருப்பன் திருநாள்!

வாழ்வை அழகாக்கும் அர்த்தமுள்ள சின்ன (பெரிய) விஷயங்கள்!

மூளை ஆரோக்கியத்திற்குத் தேவையான முதன்மை உணவு!

குறமகள் வள்ளி குகை எங்கு இருக்கு தெரியுமா?

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வந்த வரலாறு தெரியுமா?

SCROLL FOR NEXT