ஸ்பெஷல்

தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல்: ஆய்வு செய்ய சென்னை வந்தது மத்திய மருத்துவக் குழு!

கல்கி

தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில் இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள மத்திய மருத்துவக் குழு இன்று சென்னை வந்தடைந்தனர்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்:

தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் குறித்து ஆய்வு செய்ய மத்திய சுகாதாரத் துறையை சேர்ந்த வல்லுனர்கள் டாக்டர் வினிதா, டாக்டர் புர்பசா, டாக்டர் சந்தோஷ்குமார், டாக்டர் தினேஷ்பாபு ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுளது. இக்குழு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஆய்வு நடத்த உள்ளனர். இந்த மத்திய மருத்துவக் குழு, தமிழ்நாட்டில் 5 நாட்கள் வரை தங்கி மாநில சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து ஒமைக்ரான் மற்றும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகளை பரிந்துரை செய்வார்கள்.

இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

'கெவ்ரா வாட்டரில்' இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

அதிக நேரம் AC-யில் இருக்காதீங்க ப்ளீஸ்… மீறி இருந்தா? அச்சச்சோ! 

இந்த 7 சொற்றொடர்களைப் பயன்படுத்தினால் நீங்களும் ஒரு புத்திசாலி பெண்தான்!

Cape Rain Frog: வித்தியாசமான தென்னாப்பிரிக்க தவளை இனம்! 

விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

SCROLL FOR NEXT