ஸ்பெஷல்

தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

கல்கி

தெற்கு அந்தமான் கடற்பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கை:

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று மேற்கு, வடமேற்குத் திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அந்த புயல் மத்திய வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஊட்டியையே தூக்கி சாப்பிடும் குளிர்ந்த காற்று வீசும் ராமக்கல்மேடு போவோமா வாருங்கள்!

மனம் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதா?

காற்றால் இயங்கும் லிஃப்ட்டுகள் அழகுக்கு அழகு, ஆற்றலுக்கு ஆற்றல்!

சாப்பிடுவதற்கும் சில விதிமுறைகள் உண்டு தெரியுமா?

சம்மருக்கு சுவையான சிம்பிள் மில்க் ரெசிபிஸ் இதோ...

SCROLL FOR NEXT