சில நேரங்களில் சூப்பர் ஹீரோ படங்களைப் பார்க்கும்போது நமக்கும் அவர்களைப் போல சக்திகள் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என யோசித்திருப்பீர்கள்? கேப்டன் அமெரிக்கா, சூப்பர் மேன், அயன் மேன், ஹல்க் போன்றவர்களை சூப்பர் ஹீரோக்களுக்கு சான்றாக சொல்லலாம். ஒருவேளை உண்மையிலேயே மனிதர்களுக்கு திடீரென சூப்பர் பவர்ஸ் வந்துவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? வாருங்கள் இந்த பதிவில் அதன் விளைவுகளைப் பற்றி சற்று ஆராய்வோம்.
உலகில் உள்ள அனைவருக்குமே சூப்பர் பவர் கிடைத்தால் உலகமே முற்றிலும் பாதுகாப்பான இடமாக மாறிவிடும். குறிப்பாக, பறக்கும் திறன், வேகமாக ஓடும் திறன் மற்றும் ஹல்க் போல அதிக வலிமை போன்ற சூப்பர் பவர்கள் இருந்தால், குற்றங்கள் மற்றும் வன்முறைகள் போன்றவை நடப்பது குறையும். ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் அம்சங்களுடன் இருப்பதால், குற்றங்கள் நடப்பது பெரிய அளவில் குறையும்.
ஒருவேளை மக்களுக்கு நோய்களை குணப்படுத்தும் திறன், பிறரது மனதைப் படிக்கும் திறன் அல்லது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக டெலிபோர்ட் ஆகும் திறன் இருந்தால் மருத்துவம் மற்றும் அறிவியலில் வேகமான முன்னேற்றங்களை அடைய அவர்கள் அதை பயன்படுத்தலாம். அதேநேரம் பிறரைப் பற்றி முன்கூட்டியே ஒவ்வொருவருக்கும் தெரிந்துவிடும் என்பதால் உறவுகளில் பலம் என்பது பலவீனமாகவே இருக்கும்.
இதுபோன்ற சூப்பர் பவர்கள், போக்குவரத்து கட்டுமானம் மற்றும் பிற தொழில்களில் முற்றிலும் புதுமையான முன்னேற்றங்களை அடைய வழிவகுக்கும். ஏனெனில் மக்களுக்கு பறக்கும் சக்தி இருந்தால், அவர்கள் போக்குவரத்தை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேநேரம் எல்லா மக்களும் வானில் பறப்பதால் ஏற்படும் இடையூறுகளை தடுப்பதற்கு, புதிய வழிகளைக் கண்டுபிடிக்கப்படலாம்.
சூப்பர் ஆற்றல்கள் மூலமாக உலகில் வாழும் மக்களின் சமூக அமைப்புகள், அரசியல் மற்றும் கலாச்சாரம் முற்றிலுமாக மாறிவிடும். கடவுள் நம்பிக்கைகளை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பிப்பார்கள். மக்களுக்கு பிரச்சினைகளே இல்லை என்னும்போது கடவுளின் தேவை இருக்காது. எனவே மதங்கள் கலாச்சாரம் போன்றவற்றில் பெரும் மாற்றங்களை நாம் காணலாம்.
மக்களுக்கு சூப்பர் பவர்கள் இருந்தால் அவர்கள் பெரும்பாலும் இந்த சுற்றுச்சூழலை அதிகமாக சேதப்படுத்துவார்கள். எனவே என்னதான் பல நேர்மறையான விஷயங்கள் இருந்தாலும், சுற்றுச்சூழலில் இத்தகைய அதீத சக்தியால் எதிர்மறையான தாக்கங்களே ஏற்படும்.
எல்லா மனிதர்களுக்கும் ஒரே மாதிரியான சூப்பர் பவர்ஸ் இருந்தால், ஓரளவுக்கு மனிதகுலம் ஒரே நிலையில் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. ஒருவேளை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆற்றல்கள் இருந்தால், குறைந்த அல்லது பலவீனமான சூப்பர் பவர் கொண்டவர்களை, அதிக சூப்பர் பவர் கொண்டவர்கள் அடக்கி ஆளும் சூழல் ஏற்படலாம். இது முற்றிலும் வேறு விதமான சமூகக் கட்டமைப்பிற்கு வழிவகுக்கும்.
எனவே, சூப்பர் பவர்கள் மனித குலத்திற்கு நல்லதா? அல்லது கெட்டதா? என்பதை நாம் தெளிவாக சொல்ல முடியாது. மனிதர்கள் அவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே, இந்த உலகம் எப்படி இருக்கும் என்பதை நாம் தீர்மானிக்க முடியும். சூப்பர் பவர்களுடன் கூடிய மனிதர்கள் வாழும் உலகம் முற்றிலும் சுவாரசியமான மாறுபட்ட இடமாகவே இருக்கும். ஆனால் அத்தகைய சூழ்நிலைக்கு ஏற்றவாறான சவால்களும் நிச்சயம் இருக்கும்.
நீங்கள் ஒரு சூப்பர் ஹீரோவாக இருந்தால் என்ன செய்வீர்கள்? என்பதை கருத்திடவும்…