ஸ்பெஷல்

இன்று பவானிபூர் இடைத்தேர்தல்: மம்தா பானர்ஜி போட்டி!

கல்கி

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிப்பூர் உள்ளிட்ட 3 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

மேற்கு வங்கத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். இதையடுத்து முதல்வராக பதவி ஏற்ற 6 மாதத்துக்குள் எம்எல்ஏவாக தேர்வு செய்ய வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறையின்படி, பவானிபூர் தொகுதியில் போட்டியிட மம்தா மனுதாக்கல் செய்தார். மம்தாவுக்கு உதவும் வகையில் அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வேளாண்துறை அமைச்சர் சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் பவானிபூர் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அப்பகுதி மக்கள் காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். தொகுதி முழுவதும் 97 வாக்குப்பதிவு மையங்களில் 287 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி, பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தாவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தவில்லை, பாஜக சார்பில் பிரியங்கா திப்ரேவால் களமிறக்கப்பட்டுள்ளார். பவானிபூர் தவிர, ஷம்ஷெர்கஞ்ச் மற்றும் ஜாங்கிபூர் ஆகிய இடங்களிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 3-ம் தேதியும் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

'கெவ்ரா வாட்டரில்' இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

அதிக நேரம் AC-யில் இருக்காதீங்க ப்ளீஸ்… மீறி இருந்தா? அச்சச்சோ! 

இந்த 7 சொற்றொடர்களைப் பயன்படுத்தினால் நீங்களும் ஒரு புத்திசாலி பெண்தான்!

Cape Rain Frog: வித்தியாசமான தென்னாப்பிரிக்க தவளை இனம்! 

விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

SCROLL FOR NEXT