ஸ்பெஷல்

கேரளாவில் அதிகரிக்கும் நிபா வைரஸ் பரவல்: அண்டை மாநிலங்கள் அச்சம்!

கல்கி

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், அண்டை மாநிலங்கள் அச்சம் தெரிவித்துள்ளன. கேறல் எல்லையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் கட்டுப்பாடுகள் மற்றும் கண்காணிப்புகளை தமிழக அரசு அதிகரித்துள்ளது. நிபா வைரஸ் பரவல காரணமாக கேரள பயணத்தை தவிர்க்க வேண்டும் என அம்மாநில மக்களை கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது.

கேரளாவிவில் பக்ரீத் மற்றும் ஓணம் பண்டிகைகளுக்கு பின்னர், கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. மேலும் நிபா வைரஸும் பரவ தொடங்கியுள்ளது. கோழிக்கோடு அருகே 12 வயது சிறுவன் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்த நிலையில் கேரளாவின் அண்டை மாநிலங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதம் இறுதி வரை கேரள பயணத்தை தவிர்க்க வேண்டும் என கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை பரப்பவும் அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.

'கெவ்ரா வாட்டரில்' இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

அதிக நேரம் AC-யில் இருக்காதீங்க ப்ளீஸ்… மீறி இருந்தா? அச்சச்சோ! 

இந்த 7 சொற்றொடர்களைப் பயன்படுத்தினால் நீங்களும் ஒரு புத்திசாலி பெண்தான்!

Cape Rain Frog: வித்தியாசமான தென்னாப்பிரிக்க தவளை இனம்! 

விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

SCROLL FOR NEXT