ஸ்பெஷல்

பாலியல் வழக்கு: தன்னை விடுவிக்கக் கோரிய முன்னாள் சிறப்பு டிஜிபி-யின் மனு தள்ளுபடி!

கல்கி

தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாகத் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது வழக்கௌ தொடரப்பட்டது. இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டன.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி, அவருக்கு உதவியதாக முன்னாள் எஸ்.பி. ஆகியோர் மீது விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விழுப்புரம் சிபிசிஐடி காவல்துறை வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கை டிசம்பர்.20-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி குன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் முன்னாள் எஸ்.பி ஆகியோர் மனு தக்கல் செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாதன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் எஸ்.பி.யின் மனுவையும், முன்னாள் சிறப்பு டிஜிபியின் மனுவையும் தள்ளுபடி செய்வதாக நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டார்.

'கெவ்ரா வாட்டரில்' இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

அதிக நேரம் AC-யில் இருக்காதீங்க ப்ளீஸ்… மீறி இருந்தா? அச்சச்சோ! 

இந்த 7 சொற்றொடர்களைப் பயன்படுத்தினால் நீங்களும் ஒரு புத்திசாலி பெண்தான்!

Cape Rain Frog: வித்தியாசமான தென்னாப்பிரிக்க தவளை இனம்! 

விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

SCROLL FOR NEXT