ஸ்பெஷல்

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிரடி உயர்வு: வாகனஓட்டிகள் அதிர்ச்சி!

கல்கி

நாடு முழுவதும் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்திருபதால், வாடிகையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையிலும் இன்று மீண்டும் பெட்ரோல் விலை 22 காசுகள் அதிகரித்து 100 ரூபாய் 23 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை தனியார் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன.பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சென்னையிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்தது. தமிழக பட்ஜெட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில் சற்றே ஆறுதல் அடைந்திருந்த மக்கள், இப்போது பெட்ரோல் விலை மீண்டும் உயர்ந்து 100 ரூபாயை கடந்ததால் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்ந்து 100 ரூபாய் 23 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு லிட்டர் டீசலின் விலை 28 காசுகள் அதிகரித்து 95 ரூபாய் 59 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகளை கலக்கமடையச் செய்துள்ளது.
விலை அதிகரிப்பு எதிரொலியாக அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

வாழ்வை அழகாக்கும் அர்த்தமுள்ள சின்ன (பெரிய) விஷயங்கள்!

மூளை ஆரோக்கியத்திற்குத் தேவையான முதன்மை உணவு!

குறமகள் வள்ளி குகை எங்கு இருக்கு தெரியுமா?

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வந்த வரலாறு தெரியுமா?

சிறுகதை - அகழாய்வில் ஓர் அதிசயம்!

SCROLL FOR NEXT