ஸ்பெஷல்

மாநிலங்களவை உறுப்பினர் பதவி: போட்டியின்றி கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் தேர்வு!

கல்கி

தமிழகத்தில் காலியாக இருக்கும் இரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு திமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த கனிமொழி சோமு, மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகின்றனர்

ராஜ்யசபா உறுப்பினர்களாக இருந்த அதிமுகவின் கே.பி.முனுசாமி, மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏக்களாக தேர்வு பெற்றதால், தம் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதையடுத்து அந்த 2 இடங்களூக்கான தேர்தல் தேதியை அகில இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்தது. அதன்படி
திமுக தலைவர் மு..ஸ்டாலின் முன்னிலையில், அக்கட்சி சார்பாக கனிமொழி மற்றும் நாமக்கல் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் ஆகியோரும் சுயேட்சையாக 3 வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் தி.மு.. தவிர வேறு கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. மேலும் சுயேட்சையாக போட்டியிட்ட மூவரின் வேட்புமனுக்கள் முன்மொழிவோர் இல்லாததால் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வாழ்வை அழகாக்கும் அர்த்தமுள்ள சின்ன (பெரிய) விஷயங்கள்!

மூளை ஆரோக்கியத்திற்குத் தேவையான முதன்மை உணவு!

குறமகள் வள்ளி குகை எங்கு இருக்கு தெரியுமா?

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வந்த வரலாறு தெரியுமா?

சிறுகதை - அகழாய்வில் ஓர் அதிசயம்!

SCROLL FOR NEXT