Virat Kohli  
விளையாட்டு

கிரிக்கெட்டின் பாட்ஷா விராட் கோலி: சொன்னது யார் தெரியுமா?

ரா.வ.பாலகிருஷ்ணன்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, ரசிகர்களால் கிங் கோலி என அழைக்கப்படுகிறார். சேஸிங்கில் இவரது ஆட்டம் அபாரமாக இருக்கும் என்பதால் தான் இவருக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் ஓய்வு பெற்ற இந்திய வீரர் ஒருவர் கோலியை கிரிக்கெட்டின் பாட்ஷா என்று புகழ்ந்துள்ளார். யார் அந்த முன்னாள் வீரர் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம் வாங்க!

உலகம் முழுக்க பலகோடி ரசிகர்களால் கொண்டாடப்படும் விளையாட்டாக கிரிக்கெட் இருக்கிறது. கிரிக்கெட்டில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகையில், ரசிகர்கள் சிலர் வீரர்களின் சாதனைகளை ஒப்பிட்டுப் பேசுவது வழக்கம். இப்படி சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோலியை ஒப்பிட்டு நிறைய விமர்சனங்கள் வந்துள்ளன. கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் என்றால், கிரிக்கெட்டின் கிங் கோலி என்பார்கள். இவர்கள் இருவரும் பல சாதனைகளைப் புரிந்துள்ளனர்.

சச்சின் ஓய்வு பெறும் போது அவருடைய சாதனைகளை முறியடிக்கும் திறன், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவிற்குத் தான் உண்டு என அவரே சொல்லியிருந்தார். அதற்கேற்ப இந்த இரண்டு வீரர்களும் கடந்த பத்தாண்டுகளில் ஏகப்பட்ட சாதனைகளுக்குச் சொந்தக்காரர் ஆகிவிட்டனர். இதில் கடந்த ஆண்டு விராட் கோலி ஒருநாள் போட்டியில் அதிக சதம் கண்ட வீரராக உருவெடுத்தது கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல்லாக பார்க்கப்பட்டது.

வல்லவனுக்கும் வல்லவன் இருப்பது உண்மை தான். அதனால் தான் சச்சினின் சாதனைகள் விராட் கோலியால் ஒவ்வொன்றாக தகர்க்கப்பட்டு வருகின்றன. ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்து சச்சினின் மொத்த சாதனையையும் விராட் கோலி விரைவில் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அதற்கு இன்னும் சில காலம் ஆகலாம். அதற்கு முன் விராட் கோலி அடுத்து வரும் ஐசிசி தொடர்களில் சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டியது அவசியமாகும்.

விளையாடத் தொடங்கிய காலங்களில் கூட சச்சின் அவ்வப்போது காயத்தில் சிக்கிக் கொண்டதுண்டு. ஆனால் விராட் கோலி காயம் என்று எந்தப் போட்டியையும் விட்டதில்லை. அதனால் தான் கோலி ஃபிட்னஸ் விஷயத்தில் உண்மையிலேயே கிங் என ஹர்பஜன் சிங் பாராட்டினார். இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீரிடம் ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. அதாவது, கிரிக்கெட் வீரர்களை மிகவும் புகழ்பெற்ற திரைப்பட கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டால், விராட் கோலிக்கு பொருத்தமான கதாபாத்திரம் எது என கேட்கப்பட்டது. இதற்கு இருவரும் சுவாரஸ்யமான பதிலை அளித்தனர்.

“நவீன கிரிக்கெட்டில் பௌலர்களை கதற விடும் விராட் கோலி, கிரிக்கெட்டின் பாட்ஷா” என்று ஷிகர் தவான் புகழ்ந்துள்ளளார். “இளம் வீரர்களுக்கு ஃபிட்னஸில் முன்னுதாரணமாகத் திகழும் விராட் கோலி கிரிக்கெட்டின் ஷாகீன்ஷா” என பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். தவான் மற்றும் கம்பீர் ஆகிய இருவரின் பதில்களின் மூலம், கோலியின் அசாத்திய திறமையை பலரும் உணர்ந்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஏற்கனவே கிங் கோலி மற்றும் ரன் மெஷின் என அழைக்கப்படும் கோலிக்கு இன்னமும் இரண்டு பெயர்கள் புதிதாக சேர்ந்து விட்டன.

ஸ்ரீ சத்யசாயி பாபாவின் பொன்மொழிகள்!

நேர்மறை உணர்வோடு (Positive feeling) பயணியுங்கள்..!

வெண்ணெய் (Butter jeans) ஜீன்ஸின் தனித்துவம் தெரியுமா?

தினமும் காலை வெண்பூசணி ஜூஸ் குடித்தால் இத்தனை நன்மைகளா?

கடின உழைப்பே தன்னிறைவான வாழ்க்கைக்கு வழி!

SCROLL FOR NEXT