இளமையான சருமம் பெறுதல்:
அதிக அளவு சிறுதானியங்களை உட்கொள்வதன் மூலம் சருமத்தை மேலும் இளமையுடனும் மிருதுவான தோற்றத்துடனும் விளங்கச் செய்யும் செல்களைப் பாதுகாக்கின்றன. எனவே இவை சேதமடைந்த செல்களைப் புதுப்பிக்க உதவுகிறது. மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் புதுப்பிக்கப்பட்ட செல்களை மேலும் பலப்படுத்துகிறது.
உடலின் ஈரப்பத்த்தினை அதிரிக்கிறது:
சிறுதானியங்களை அதிக அளவில் சாப்பிடுவதன் மூலம் அவை இயற்கையான ஈரப்பத்தினைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. இவை மந்தமான தோற்றம் மற்றும் வறண்ட சருமத்தினை ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும் விளங்கச் செய்கிறது.
முகப்பருவினைக் குறைக்கிறது:
சிறுதானியங்களில் காணப்படும் ஒரு வகையான கொழுப்புத் திசு (Lipoic) உயிரணு வளர்சிதை மாற்றம் சுழற்சியினை அதிகரிப்பதன் மூலம் மதிப்பு மிக்க அழற்சியற்ற விளைவை உருவாக்குகிறது. இத்தகைய அழற்சியற்ற பொருள் உடலின் இரத்த ஓட்டத்தினை அதிகரிப்பதன் மூலம் முகத்தில் ஏற்படும் முகப்படுக்கள் மற்றும் தோலின் சுருக்கங்களைக் குறைக்க உதவுகிறது.
தோலின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கின்றது:
சிறுதானியங்களில் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை உடலில் கொலாஜெனை (Collagen) உருவாக்க உதவுகின்றன. இத்தகைய கொலாஜென் சருமத்தின் திசுக்களுக்கு ஒரு அமைப்பைக் கொடுக்கிறது. இவ்வாறு சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுவதன் மூலம் கொலாஜென் அளவு அதிகரிக்கிரித்து சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை (Skin Elasticity) மேம்படுத்துகிறது. இதனால் தோலில் ஏற்படும் சுருக்கங்கள் குறைவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.
முதுமையடைவதைத் தடுக்கிறது:
(Antioxidants) சிறுதானியங்களில் அதிக அளவில் உள்ளன . அதிக அளவில் உள்ள சிறுதானியத்தை உணவில் எடுத்துக் கொள்ளும் போது மன அழுத்தத்தை எதிர்த்துப் போரடுகின்றன.
தோலின் மீது தென்படும் வயதாவற்கான அறிகுறிகளைத் தலைகீழாக மாற்ற உதவுகிறது. இவை சரும செல்களுக்குப் புத்துயிர் அளிப்பதன் மூலம் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. சிறுதானியங்களில் உள்ள (Ubiquinone) முகத்தில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைப்பதற்காக அழகுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.
வடுக்களைக் குறைக்கிறது:
வடுக்கள் ஏற்பட்ட சருமம் கடினத்தன்மையுடன் காணப்படுகிறது. சிறுதானியங்களில் காணப்படும் ஒன்றான ஆலியம் (Alium) இது வடுக்கள் நிறைந்த திசுக்களில் இரத்த ஓட்டத்தினை அதிகரிக்க உதவுகிறது. ஆலியம் புதிய தோல்வளர்ச்சியில் கலந்து வடுக்கள் குறைவதற்குப் பயன்படுகிறது. இது தோல் பராமரிப்பு அல்லது தோல் பழுது பார்க்கும் (Skin Repair) அமைப்பின் வேகத்தை அதிகரிக்கிறது. மற்றும் தோலில் அமைப்பினை சேதமடைவதிலிருந்து தடுக்கிறது.
சூரியன் மூலம் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது:
சிறுதானியங்களில் உள்ள செலினியம், வைட்டமின் சி மற்றும் வைட்டமின்-பி போன்றவை சூரியனால் தோலில் ஏற்படும் சேதம் மற்றும் தோல் புற்றுநோய்க்கு எதிராகச் சருமத்தைப் பாதுகாக்கிறது. சூரியனால் ஏற்படும் சேதத்தினால் தோலின் நிறம் மந்தமாவதுடன் மேலும் தோலினை உயிரற்றதாக மாற்றி விடுகிறது. ஆனால் சிறுதானியங்களில் உள்ள சத்துக்கள் புதிய செல்கள் வளர்வதை ஊக்குவிக்கின்றன. மேலும் தோலினை இளமையாகவும், பொலிவுடனும் தோற்றமளிக்க உதவுகின்றன. மேலும் இந்தச் சத்துக்கள் சூரிய ஒளியுடன் தொடர்புடைய தோலின் நிறமாற்றம் மற்றும் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைக்கவும் பயன்படுகிறது.
நிறத்தினை அதிகரிக்கிறது:
சிறுதானியங்களில் வைட்டமின்-ஈ நிறைந்து காணப்படுகிறது. இந்த வைட்டமின்-ஈ தோலுக்கு ஒரு வியத்தகு வைட்டமினாகக் கருதப்படுகிறது. இந்த வைட்டமின்-ஈ தோலின் அடுக்குகளில் ஊடுருவிச் சென்று இயற்கையாகவே காயத்திற்கான சிகிச்சை (Wound healing) தன்மை அதிகரிக்கிறது. இதனால் நுண்ணுயிரிகளின் அபாயத்திலிருந்து காயத்தினைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. சிறுதானியங்களில் உள்ள அதிகப்படியான வைட்டமின்-ஈ யினால் தோலின் நிறத்தை அதிகரிக்க முடியும்.