Dean Elgar Century. 
விளையாட்டு

அதிரடி சதம்: கிப்ஸ், கேரி கிர்ஸ்டன் வரிசையில் டீன் எல்கர்!

ஜெ.ராகவன்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடருடன் ஓய்வுபெறப்போவதாக அறிவித்த தென்னாப்பிரிக்க அணியின் மூத்த வீர்ரான டீன் எல்கர், முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் பரபரப்பாக ஆடி, அதிரடியாக 140 ரன்கள் குவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். நூறு ரன்களை எட்டியதும் டீன் எல்கர் பேட்டை உயர்த்திக்காட்டி கர்ஜித்தார். தனது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தினார். 141 பந்துகளை சந்தித்து அவர் சதம் எடுத்தார். 140 ரன்கள் குவித்து கடைசிவரை அவுட்டாகமல் இருந்த அவர் 20 பவுண்டரிகளை விளாசியுள்ளார். இந்திய அணியின் பந்துவீச்சை கிழித்தெடுத்தார்.

தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்கார்ர் அய்ட் மார்கரம் வெளியேறியபின்பு டீன் எல்கர் உஷாரானார். இந்திய அணியினரின் மோசமான பந்துகளை அடித்துவிளையாட அவர் தவறவே இல்லை. பும்ரா, அஸ்வின் பந்துகளைத் தவிர மற்ற பந்துவீச்சாளர்களின் பந்துகளை அநாயாசமாக அடித்து ஆடினார்.

இது டீன் எல்கருக்கு 14 வது டெஸ்ட் போட்டி சதமாகும். இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்காவில் எடுத்த முதல் சதம். சென்சூரியன் பார் ஸ்டேடியத்தில் அவர் எடுத்துள்ள முதல் சதமாகும். இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் ஆஸ்திரேலிய வீர்ர் டேவிட்வார்னர் அடித்த சதம் போல் எல்கரும் ஓய்வுபெறும் நிலையில் இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த மூன்றாவது தென்னாப்பிரிக்க அணி வீர்ர் டீன் எல்கர். ஏற்கெனவே ஹெர்ஸ்சலே கிப்ஸ் மற்றும் கேரி கிர்ஸ்டன் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

கேரி கிர்ஸ்டன் 1997 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் 103 ரன்கள் குவித்தார். 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் ஹெர்ஸ்சலே கிப்ஸ் 107 மற்றும் 196 என இரண்டு சதங்களை அடித்தார். இப்போது 2023 இல் டீன் எல்கர் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இரண்டாம் நாள் ஆட்டத்தில் எல்கரின் அதிகவேக ஆட்டத்தை பாராட்டினார். மிகவும் சரளமாக அவர் விளையாடினார்.

அவர் இதுபோல் விளையாடியதை நான் முன்பு பார்த்ததில்லை. மிகவும் சரளமாக ஆடினார். தன்னை நோக்கி வந்த பந்தை அவர், மிக லாகவமாக ஆஃப் சைடை நோக்கி விரட்டினார். அவர் எடுத்த ஸ்கோரில் பெரும்பாலானவை பவுண்டரிகள்தான். தனக்கு கிடைத்த வாய்ப்பை அவர் தவறவிடவில்லை என்றார் ரவி சாஸ்திரி.

முதிர் பெண்களின் மன அழுத்தம் போக்கும் எளிய வழிகள்!

புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாளுக்கு தளிகை செய்வது எப்படி?

வெறும் வயிற்றில் அத்திப்பழ தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் 10 நன்மைகள்!

உங்கள் குழந்தைகளுக்கும் இந்த 7 ரகசியங்களைக் கற்றுத் தரலாமே!  

திரைப்பட ஒளிப்பதிவில் மலைக்க வைத்த மந்திர வித்தகர் மாருதிராவ்!

SCROLL FOR NEXT