விளையாட்டு

தயிர் பச்சடி சாப்பிடுவதால் எவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

ஆர்.ஜெயலட்சுமி

தினமும் தயிர் பச்சடி சாப்பிடுவதால் எவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

ப்பாத்தி, பூரி, பிரியாணி, ஃப்ரைடு ரைஸ் ஆகிய உணவுகளுக்கு சைடு டிஷ்ஷாக சாப்பிடும் தயிர் பச்சடியில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. 

யிர் பச்சடி ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும், குறிப்பாக கோடை காலத்தில் தயிர் பச்சடியை உங்கள் உணவில் தவறாமல் சேர்த்து வந்தால், அது உங்கள் உடலுக்கு அற்புதமான ஆரோக்யமான நன்மைகளை அளிக்கிறது.

யிர் மற்றும் வெங்காய கலவை உடல் நலத்திற்கு மிகவும் நன்மை தருவதாக இருக்கிறது. இரண்டையும் ஒன்றாகச் சாப்பிடுவதன் மூலம், அத்தியாவ சியமான ப்ரீபயாடிக்குகள் உடலுக்குள் சீராக சென்றடையும். இதனால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன், உடலில் ஏதேனும் வீக்கம் இருந்தால், அதுவும் குறையும்.

தயிர் பச்சடியில் உள்ள ஊட்டச்சத்து கலவைகள்

வெங்காயம் மற்றும் தயிர் இரண்டிலும் உள்ள சத்தான கலவையானது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். வைட்டமின்-B5, வைட்டமின்-B12, பொட்டாசியம், ரிபோஃப்ளேவின், அயோடின், ஜிங்க், பாஸ்பரஸ் போன்றவற்றின் நல்ல மூலாதாரமாக தயிர் உள்ளது. மறுபுறம், வைட்டமின்-A, வைட்டமின்-B, வைட்டமின்-C தவிர, வெங்காயத்தில் ஃபோலிக் அமிலம், கால்சியம், மக்னீசியம், இரும்பு சத்து மற்றும் நார்ச்சத்து ஆகியவை இருக்கின்றன. எனவே இந்த அடிப்படையில், ஒரு கிண்ணம் தயிர் பச்சடி சாப்பிடுவதன் மூலம், இந்த சத்துக்கள் அனைத்தும் உங்கள் உடலை சென்றடையும்.

தயிர் பச்சடி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

தய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்வெங்காயம் ரத்தம் உறைவதை தடுக்கும் தன்மை கொண்டது, அதை தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் உடலில் ரத்தம் உறைதல் பிரச்சனையை குறைக்கும். தயிர் பச்சடி ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவையும் கட்டுப்படுத்துகிறது. இந்த வகையில், தயிர் பச்சடி இதய நோய்களில் இருந்து உங்களைப் பாதுகாக்க உதவுகிறது.

பெண்களுக்கு மெனோபாஸை எளிதாக்குகிறது.

வ்வொரு பெண்ணுக்கும் மெனோபாஸ் ஏற்படும் காலகட்டம் சற்று சிரமமானது. இதை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது, ஆனால் தயிர் பச்சடியை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கடினமான அந்த பிரச்னையை கொஞ்சம் எளிதாக்கலாம். வெங்காயத்தில் கால்சியம் உள்ளது, இது எலும்புகளை பலப்படுத்துகிறது மற்றும் பெருந்தமனி தடிப்பாகுதல் போன்ற பிரச்சனை களைத் தடுக்கும்.

உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவும்

கோடை காலங்களில் தயிர் பச்சடியை தினசரி உங்கள் உணவில் சேர்த்து வந்தால், உஷ்ணத்தால் ஏற்படும் நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு ஆகிய அபாயங்கள் குறையும். தயிர் பச்சடி உங்கள் உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்கிறது மற்றும் உடலின் உள்ளே இருந்து குளிர்ச்சியாக வைக்கிறது.

நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது

ங்களுக்கு சளி மற்றும் இருமல் பிரச்சனை அடிக்கடி ஏற்பட்டால், தயிர் பச்சடியில் ஆண்டி இன்பிளமேட்டரி மற்றும் ஆன்டி பாக்டீரியா பண்புகள் நிறைந்திருப்பதால் அவசியமாக இதை சாப்பிட வேண்டும்.

தயிர் பச்சடியை எப்படி சாப்பிட வேண்டும்

திய உணவில் தயிர் பச்சடியை சாதாரண சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இதை இன்னும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற, இத்துடன் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் மற்றும் சீரகத்தை சேர்க்கவும்.

யிர் பச்சடியை பிரியாணியுடன் கூட சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். நீங்கள் வெஜ் பிரியாணி அல்லது அசைவ பிரியாணி இரண்டிற்குமே தயிர் பச்சடி செய்து சாப்பிடலாம்.

ரு வேளை மதிய உணவு சாப்பிட்ட பிறகும் பசி எடுத்து கொண்டே இருந்தால், வெறும் தயிர் பச்சடியை மட்டும் சாப்பிட்டு பசியை போக்கி கொள்ளலாம்.

ஒட்டு மொத்த ஆரோக்கியத்துக்கும் இது மட்டும் போதுமே....

உச் கொட்டி ருசிக்க ஜோரான திருநெல்வேலி சொதியும், கேரள அவியலும்!

சளி, காய்ச்சல், இருமலில் இருந்து ஈசியாய் விடுபடலாம்!

குறுநாவல்: 'அம்புஷ்' அத்தியாயம் - 3

சிறுகதை: கருப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு..!

SCROLL FOR NEXT