விளையாட்டு

கால்பந்து க்ளப் வீரர்களும் உலக கால்பந்து போட்டியும்!

ஜி.எஸ்.எஸ்.

கால்பந்தைப் பொருத்தவரை நாடு என்ற அடிப்படையை விட க்ளப் என்ற அடிப்படைதான் மிக முக்கியம்.  க்ளப்புகளுக்கிடையேதான் ப​ழி சண்டை நடக்கும். மான்செஸ்டர் க்ளப்,  பார்சிலோனா க்ளப், ரியல் மாட்ரிட் க்ளப்  என்று அந்த அடிப்படையில்தான் விளையாட்டு வீரர்கள் ஆடுவது வழக்கம்.  அதில்தான் அவர்களுக்கு ஊதியமும் எக்கச்சக்கமாக கிடைக்கும்.

இப்போது நடக்கும் ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை பந்தயங்களில் எந்தெந்த க்ளப்பை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் பங்கு பெறுகிறார்கள் என்பதை பார்ப்போமா?

* முதலில் இருப்பது பார்செலோனா க்ளப்.  இதைச் சேர்ந்த 17 பேர் இந்த ஆண்டு கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளில் பங்குபெறுகிறார்கள். 

பார்சிலோனா ஸ்பெயினில் இருக்கிறது.  ஆனால் அதற்காக இந்த க்ளப்பை சேர்ந்த 17 பேரும் ஸ்பெயின் அணியில் பங்கு பெறப்போவதில்லை.  அது மாறுபடும். பார்சிலோனா க்ளப்பிலிருந்து உலக கோப்பையில் பங்குபெறும் வீரர்களின் பட்டியல் இது.

செர்ஜியோ பஸ்கெட்ஸ், ஜோர்டி அல்பா, அரெஜன்ரோ பால்டே, அன்ஸு ஃபடி, எரிக் கார்சியா, கவி, பெட்ரி, ஃபெரன் டோரெஸ் ஆகியோர் ஸ்பெயின் அணியில் இடம் பெறுகிறார்கள். 

ஆனால் ரொனால்ட் அரஜூவோ உருகுவே அணிக்காகவும்,  ஆண்ட்ரியாஸ் கிரிஸ்டன்சென் டென்மார்க் அணிக்காகவும், ஃப்ராங்க்கி டெ சாங் மற்றும் மெம்பிஸ் டேபே ஆகியோர் நெதர்லாந்து அணிக்காகவும் ஒஸ்மனே டெம்பெலே மற்றும் ஜூல்ஸ் கவுன்டே பிரான்ஸ் அணிக்காகவும், ராபர்ட் லெவான்டோஸ்கி போலந்து அணிக்காகவும் , ராபின்ஹா பிரேசில் அணிக்காகவும், டெர் ஸ்டெஜென் ஜெர்மனி அணிக்காகவும்  விளையாடுகிறார்கள்.

* தொடக்கத்தில் ஜெர்மனியில் உள்ள பேயர்ன் ​மூனிச் க்ளப்பைச் சேர்ந்த 17 பேரும் கூட தற்போது நடக்கும் போட்டிகளில் ஆடுவதாக இருந்தது.  ஆனால் அந்த க்ளப்பை சேர்ந்த சாடியோ மேன், காயம் ஏற்பட்டதின் காரணமாக இந்தப் போட்டியில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்ததால் அது பதினாறு ஆகிவிட்டது.

இந்தப் பதினாறு பேரில் ஏழே நபர்கள்தான் ஜெர்மனி அணியில் இடம் பெறுகிறார்கள்.  மீதிப்பேர் பிரான்ஸ், கனடா, நெதர்லாந்து,  குரோவாசியா, மொரோக்கோ ஆகிய நாடுகளில் இடம் பெறுகிறார்கள்.

* மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து) க்ளப்பைச் சேர்ந்த 16 பேர் இந்த உலக கோப்பைப் போட்டிகளில் இடம் பெறுகிறார்கள்.

* புகழ் பெற்ற க்ளப்களில் ஒன்றான ரியல் மாட்ரிட் அணியைச் சேர்ந்த 12 பேர் உலக கோப்பை போட்டிகளில் பங்கெடுத்துக் கொள்கின்றனர்.

இதுவரை...

பிரிவு ஏ

உள்ளூர் அணியான கட்டா​ரை ஈக்குவேடார் அணி 2-0 என்ற கணக்கில் வென்றது.

நெதர்லாந்து அணி 2-0 கோல் கணக்கில் செனெகலைத் தோற்கடித்தது.

பிரிவு பி

இங்கிலாந்து அணி ஈரானை 6-2  என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது.

அமெரிக்கா மற்றும் வேல்ஸ் அணியினர் தலா ஒரு கோல் போட்டது.

பிரிவு சி

உலகச் சாம்பியனான மெஸ்ஸி அர்ஜென்டினா அணியில் இடம் பெற்றவர்.  இரு முறை உலக சாம்பியன் ஆக விளங்கிய அர்ஜென்டினா அணி இம்முறை சவுதி அரேபியாவிடம் 1-2 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

பிரிவு டி

டென்மார்க், துனிசியா அணிகளின் மோதல் கோல்களின்றி டிராவில் முடிவடைந்தது.

                                                **********

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT