Life Lessons to Learn from IPL Matches
Life Lessons to Learn from IPL Matches 
விளையாட்டு

IPL - வழிவிடும் நேரம் வந்தாச்சு! எதிர்பார்ப்புகள் எகிறிப்போச்சு!

வாசுதேவன்

15 வருடங்கள் உருண்டோடிவிட்டன.

பல்வேறு நிகழ்வுகள் நடைப்பெற்று விட்டன.

ஏற்ற, தாழ்வுகளைச் சந்தித்துவிட்டன.

ரசிகர்கள் எண்ணிக்கை பலமடங்கு ஆகிவிட்டது, கூடவே எதிர்பார்ப்புக்களும்தான்! பவுலர்கள் பல மேட்ச்சுகளில் திணற வேண்டியுள்ளது. வருடா வருடம் புது முகங்கள் வருவதும் அதிகரித்துவிட்டன.

ஆம். இந்த 15 வருடங்களில், ஐ பி எல்லின் ஆதிக்கமும், தாக்கமும் நன்கு தெரிகிறது. மாறியும் வருகிறது.
அவ்வளவு ஏன் ஐ பி எல் போட்டியில் ஆட மற்ற முக்கியமான, அத்தியாவசியமான மேட்ச்சுக்களிலிருந்து ஒதுங்கி, அதற்கு காரணங்கள் கூறிய நிகழ்வுகள்கூட நடைபெற்றனவே.

ரசிகர்கள் எதிர்பார்ப்புகள் மாதிரி ஐ பி எல் அணிகளை வைத்து இருப்பவர்கள் (IPL Team Owners) எதிர்பார்ப்புக்களும் அதிகரிக்க செய்கின்றன.

எனவே, வீரர்கள் புகழின் அல்லது முந்தைய செயல்திறன் (past performance basis) அடிப்படையிலோ தங்கள் இடங்களை அணியில் தக்க வைத்துக்கொள்வது என்பது மேட்ச்சுக்கு மேட்ச் கடினமாகி வருகின்றது என்பது நிதர்சனமான உண்மை.

அதிரடியான ஆட்டம் ஆட திறமை மட்டும் கைகொடுக்காது. உடன் உடல் வலிமையும் அத்தியாவசியம் என்பதும் நிரூபணமாகி வருகிறது.
ஐ பி எல் மேட்ச்சுக்கள் ஜெட் வேக செயல் திறன்களை (Jet speed performances) பங்கு பெரும் எல்லா வீரர்களிடமிருந்து எதிர்பார்ப்பதில் தவறு எதுவும் இல்லை. அப்படித்தான் எதிர்பார்க்க வேண்டும்.

வீரர்களின் ‘திறமை’ என்பது அவர்களது பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என்று விளையாட்டு சம்பந்தப்பட்டது மட்டுமாக இல்லை இந்நாட்களில். வீரர்கள் மைதானத்தில் எப்பொழுதும் ரெடியாக இருக்க வேண்டும், செயல்பட (on the toes always to deliver), அதிகமான சக்தி (adequate strength), அடுத்து என்ன நடக்கும் என்ற சிந்தனை (anticipating the possible move), களத்தில் செயல்படுவதற்கு தேவையான பண்புகளில் ஒன்றான மிகுந்த செறிவு (concentration and keen attention) போன்றவை முக்கியத்துவம் பெருகின்றன.
இவை அனைத்தும் ஒன்றுகூடி, திறன்பட செயல்பட்டு, சாதகமான நேர்மறையான முடிவு கிடைக்க, இடைவிடாமல் பாடுபட வேண்டும். அதற்கு வயதும் மிக முக்கியமாக ஒத்துழைக்க வேண்டும் என்பதும் நிதர்சனமான உண்மை மட்டும் அல்லாது மறுக்கவும், மறைக்கவும் முடியாது. சில அனுபவ ஆட்டக்காரர்களின் விளையாட்டுக்களை இந்த சீசன் ஐ பி எல் மேட்ச்சுக்களில் பார்க்கும்பொழுது பரிதாபமாக இருக்கின்றது.

அவர்கள் திறமை மிக்கவர்கள், அனுபவம் அவர்கள் பக்கம் இருக்கிறது என்பதெல்லாம் மறுக்கமுடியாத உண்மை. இருந்தும் களத்தில் ஓடுவதற்கும், பந்துக்களை தடுப்பதற்கும், கேட்சுக்கள் பிடிப்பதற்கும், (Fielding area) பந்துக்களை சரிவர மேட்ச் சூழ்நிலைக்கு ஏற்ப திறமையாக போடுவதற்கும் (Bowling department) பந்துக்களை அடித்து ஆடுவதற்கும் (Batting) வயது கூடி வரும் வீரர்களால், சில வருடங்களுக்கு முன்பு அளித்த முழு பங்கு அளிப்பையும் ரிச்ல்ட்டையும் எவ்வளவு முயன்றும், அதிகரித்து வரும் வயதின் காரணமாக இன்று இந்த சீசனில் அளிக்க முடியவில்லை என்பது உண்மை.
எனவே, அப்படிப்பட்ட வீரர்கள் ஒதுங்கி கொள்ளாவிட்டால், ஒதுக்கப் படுவார்கள் என்பதும் உண்மை.

திறமை கொண்ட இளம் வீரர்கள் அதிகம் இருப்பதால், ஐ பி எல் மேட்ச்சுக்களில் ஆர்வம், வேகம், செயல் திறன் இவை எதுவும் குறையாது. அதற்கேற்ப எதிர்பார்ப்புகளும் குறையாமல் கூடிக்கொண்டேதான் இருக்கும்!

சரும நோய்களைப் போக்கும் சிறந்த நிவாரணி புங்கம்!

பாவங்களைப் போக்கும் பர்வதமலை மல்லிகார்ஜுனேஸ்வரர்!

மாம்பழ சுவையில் மதி மயங்கி உடல் ஆரோக்கியத்தை மறவாதீர்!

தென்கொரியாவில் உண்ணப்படும் மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ் வகைகள்!

அவல் நிவேதனம் நடைபெறும் அனுமன் கோயில் எங்குள்ளது தெரியுமா?

SCROLL FOR NEXT