1956 - மெட்ராஸ் டெஸ்ட். அன்றைய கார்ப்பரேஷன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
நியூசிலாந்து, இந்தியா டீம்களுக்கிடையே ஆன டெஸ்ட் மாட்ச்.
இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் ஸ்கோர் 234 / 0.
வினு மங்கட் 109*
பங்கஜ் ராய் 114*
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி கேப்டன் பாலி உம்ரீகர் இந்திய அணியின் ஆட்டத்தை முடித்துக் கொண்டார். ஸ்கோர் 537 / 3 டிக்ளர்.
அதற்குள் இந்திய அணியின் ஒப்பனிங் வீரர்கள் இருவரும் தங்களது அபார பேட்டிங்கால் முதல் விக்கெட்டிற்கு உலக ரிக்கார்ட் ஏற்படுத்தினர். இந்த ஜோடி பார்ட்னர்ஷிப்பில் எடுத்தது 413 ரன்கள்.
இந்த ஜோடியைப் பிரிக்க நியூசிலாந்து அணி வீரர்கள், மிகவும் பிரயத்தனபட்டனர். முடியாததால் சோர்ந்தும் போயினர்.
முதலில் அவுட் ஆன பங்கஜ் ராய் 12 பவுண்டரிகள் அடித்தார். பூரே பவுலிங்கில் இவர் அவுட் ஆனார். இவர் எடுத்த ரன்கள் 173.
வினு மங்கட் இரட்டை சதம் எடுத்தார். இவர் அடித்தது 21 பவுண்டரிகள். கவே கேட்ச் பிடிக்க, மோயிர் பந்தில் அவுட் ஆனார். இவர் எடுத்த ரன்கள் 231.
நியூசிலாந்து அணி பலோவ் ஆன் பெற்றது. அவர்கள் ஸ்கோர் 209 & 219.
இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசியவர்கள்
சுபாஷ் குப் தே 9 விக்கெட்டுகள் (5 / 72. & 4 / 73).
ஜெசு பட்டேல் 4 விக்கெட்டுகள் (3 / 63. & 1 / 28).
வினு மன்காட் 4 விக்கெட்டுகள் (0 / 32. & 4 / 65)
இந்திய அணி வெற்றி பெற்றது ஒரு இன்னிங்ஸ் 109 ரன்கள் வித்தியாசத்தில்.
இந்த 413 ரன் பார்ட்னர்ஷிப்பானது 2 வருடங்களுக்கு முறியடிக்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் ஒரு சில அதிக பார்ட்னர்ஷிப்கள் நடந்தன. இன்றுவரை டெஸ்ட்டில் மிக அதிக பட்ச பார்ட்னர்ஷிப் எது தெரியுமா? தெரிந்துகொள்வோமா?
வருடம் 2006 27 ஜூலை:
தென் ஆப்பிரிக்கா Vs ஸ்ரீலங்கா
கொழும்பு டெஸ்ட் மேட்ச்
முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி முத்தையா முரளிதரன், தில்ஹரா பெர்னான்டோ பவுலிங்கை எதிர் கொள்ள முடியாமல் 169 ரன்களுக்கு ஆல் அவுட் ஆயுற்று. இந்த இரண்டு பவுலர்களும் தலா 4 விக்கெடுக்கள் எடுத்தனர்.
ஸ்ரீ லங்காவின் குமார் சங்கக்காரா, மஹிளா ஜெயவர்தனே ஜோடி சேர்ந்து சரித்திரம் படைக்கத் துவங்கினர்.
முதல் இரண்டு விக்கெட்டுகள் விரைவில் விழ 14 / 2 என்ற நிலையயில் இந்த இரு வீரர்கள் ஒன்று சேர்ந்தனர்.
முதல் நாள் ஆட்ட முடிவில் ஸ்கோர் 128 / 2
சங்கக்காரா 59*,
ஜெயவர்தனே 55*
இருவரும் இரண்டாம் நாள் முழுவதும் ஆடி, மூன்றாம் நாளும் தொடர்ந்தனர், தங்களது அருமையான ஆட்டங்களை. அனுபவம் மிக்க எதிரணி பவுலர்களால் எவ்வளவு முயன்றும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.
இருவரின் பேட்டுக்களில் பட்ட பந்துக்கள் பல பவுண்டரிகளாக ரன்களை அதிகரித்தன. இருவரின் பவுண்டரிகள் மட்டும் பெற்ற மொத்த ரன்கள் 312 என்றால் ஆட்டம் எப்படி இருந்து இருக்கும் என்பதை கணிக்க முடிகின்றது அல்லவா?
கிரிக்கெட்டில் உள்ள எல்லா வகையான ஷாட்டுக்களை அடித்து ரசிகர்களுக்கு ரன்கள் விருந்து படைத்தனர். இருவரும் இரட்டை சதம் அடித்து மூன்றாம் நாளும் ஆட தொடங்கினர்.
குமார் சங்கக்காரா இருவரில் முதலில் அவுட் ஆனார். அப்போது ஸ்கோர் 638 / 3.
அவர் அடித்த ரன்கள் 287.
குமார் சங்கக்காரா எதிர்கொண்டது 457 பந்துக்கள். 35 பவுண்டரிகள்.
இவர் ஹால் பந்தில் பௌச்சர் கேட்ச் பிடிக்க அவுட் ஆனார்.
கேப்டன் மஹிளா
ஜெயவர்தனே தொடர்ந்து ஆடி மூன்றாவது சதத்தை பூர்த்தி செய்தார்.
இவர் நெல் வீசிய பந்தில் அவுட் ஆனார்.
எடுத்த ரன்கள் 374. எதிர் கொண்ட பந்துக்கள் 572. பவுண்டரிகள் 43. சிக்ஸர் 1.
இருவரின் பார்ட்னர்ஷிப் குவித்த ரன்கள் 624.
இன்று வரையில் இந்த அதிக பட்ச பார்ட்னர்ஷிப் ரன்களாக இதுவே உள்ளது.
இவர்களின் அபார பார்ட்னர்ஷிப் ஸ்ரீ லங்கா 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 756 ரன்கள் குவித்து டிக்ளர் செய்ய பெரிதும் உதவியது.
ஸ்கோர்
தென் ஆப்ரிக்கா
169 & 434
ஸ்ரீலங்கா
756 / 5 டிக்ளர்
ஆட்ட நாயகர் மஹிளா ஜெயவர்தனே.
ஸ்ரீலங்கா ஒரு இன்னிங்ஸ் 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.
மூன்றாவது விக்கெட்டிற்கு மட்டும் அல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்திலேயே இவ்வளவு அதிகமான 624 ரன்கள் பார்ட்னர்ஷிப் எல்லா விக்கெட்டுக்களுக்கும் சேர்த்து அளித்துள்ள
மஹிளா ஜெயவர்தனே, குமார் சங்கக்காரா ஜோடி சாதனையை அவ்வளவு எளிதில் முறியடிக்க முடியாது, என்பது நிதர்சனமான உண்மை.