Rohit Sharma sets record in T20 International!
Rohit Sharma sets record in T20 International! 
விளையாட்டு

டி20 சர்வதேச போட்டியில் சாதனை படைத்தார் ரோகித் சர்மா!

ஜெ.ராகவன்

பெங்களூருவில் புதன்கிழமை நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி சதம் எடுத்தார். இது ரோகித் சர்மாவின் ஐந்தாவது டி20 சர்வதேச போட்டி சதமாகும். குறுகிய ஆட்டம் முறையிலான போட்டியில் சாதனை படைத்த முதல் இந்திய பேட்ஸ்மென் ரோகித் சர்மாதான்.

ரோகித் சர்மா, 69 பந்துகளை சந்தித்து 8 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 121 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது. டி20 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி எடுத்த ரன்களைவிட அதிக ரன்கள் குவித்து ரோகித் சாதனை படைத்துள்ளார். விராட் கோலி கேப்டனாக 1570 ரன்கள் எடுத்துதான் இதுவரை சாதனையாக இருந்தது. 

மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 4 விக்கெட்டுகளுக்கு 212 ரன்கள் குவித்து இந்தியா வெற்றிவாகை சூடியது. இதில் ரோகித் சிறப்பாக ஆடி ஐந்தாவது சதத்தை எடுத்தார்.

ரோகித் 121 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரிங்கு சிங் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து அவருக்கு உறுதுணையாக இருந்தார். இருவரும் ஐந்தாவது விக்கெட்டுக்கு கூட்டாக 190 ரன்கள் எடுத்தனர். ஒரு கட்டத்தில் 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த்து. மிகவும் சோதனையான கட்டத்தில் ரோகித் நின்று ஆடி சதம் அடித்து அணியை சரிவிலிருந்து மீட்டார். அவருக்கு ரிங்கு பக்கபலமாக இருந்தார்.

ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் தனது திறமையான பேட்டிங்கில் திணறடித்தார் ரோகித். லெக் ஸ்பின்னரான குவாஸ் அகமதுவின் பந்தை விளாசி ஆடி விரைவில் அரை சதத்தை எட்டினார் ரோகித். வேகப்பந்து வீச்சாளர் முகமது சலீமின் பந்தையும் அடித்து ஆடினார் ரோகித்.

63 பந்துகளில் சதத்தை எட்டினார் ரோகித். கடைசியாக 2018 இல் அவர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 111 ரன் எடுத்திருந்தார்.

டி20 சர்வதேச ஒருநாள் போட்டியில் ரோகித் எடுத்த அதிகபட்ச ரன்களும் (121 நாட்அவுட்) இதுதான். 2017 இல் ரோகித், இலங்கைக்கு எதிராக விளையாடியபோது 118 ரன்கள் எடுத்திருந்ததுதான் அதிகபட்ச ரன்களாக இருந்தது.

நீங்க சீக்கிரமா உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்றீங்களா? ப்ளீஸ், இது மட்டும் வேண்டாமே! 

காகத்திற்கு உணவு வைப்பதன் அவசியம் என்னவென்று தெரியுமா?

அமிதிஸ்ட் கற்களைப் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

SCROLL FOR NEXT