Stan Wawrinka
Stan Wawrinka 
விளையாட்டு

Stan Wawrinka: தன்னம்பிக்கை, மன உறுதி மற்றும் தைரியத்தின் அடையாளம்!

கிரி கணபதி

மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஸ்டேன் வாவ்ரிங்கா, Indian Wells டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றிலேயே தோல்வியுற்று வெளியேறினார். இருப்பினும் இவர் ஒரு சிறந்த டென்னிஸ் வீரர். இவரைப் பற்றிய சில விஷயங்களை இந்தப் பதிவின் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம் வாங்க. 

ஆரம்பகால வாழ்க்கை: மார்ச் 28 1985ல் சுவிட்சர்லாந்தின் லொசானில் பிறந்த வாவ்ரிங்கா, இளம் வயதிலேயே தனக்கு டென்னிஸில் ஆர்வம் இருப்பதைக் கண்டுபிடித்தார். பின்னர் அவரது பெற்றோரின் வழிகாட்டுதலின் கீழ் தன் திறமைகளை மெருகேற்றி சிறந்த வீரராக கொஞ்சம் கொஞ்சமாக உருமாற்றம் அடைந்தார். 2003 ஆம் ஆண்டில் தொழில்முறை டென்னிஸ் வீரராக மாறி, டென்னிஸ் உலகில் தன் முத்திரை பதிக்கும் பயணத்தைத் தொடங்கினர். 

வளர்ச்சி: டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் வாப்ரிங்காவின் உயர்வு படிப்படியாகவும் நிலையாகவும் மாறியது. 2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் 2010 யுஎஸ் ஓபனில் நான்காவது சுற்றை எட்டியதன் மூலம் அவர் தனது திறமையை உலகிற்குத் தெரியப்படுத்தினார். இருப்பினும் 2014 ஆம் ஆண்டில்தான் அவரது திறமை மற்றும் மன உறுதியை டென்னிஸ் உலகம் உண்மையில் கவனிக்க ஆரம்பித்தது. 

அந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓப்பனில் தன் முதல் கிராஸ்லாம் பட்டத்தை வென்றதன் மூலம் வாவ்ரிங்காவின் வாழ்க்கை முற்றிலும் மாறியது.  தனது நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் சாம்பியன் ரஃபேல் நாடாலுக்கு எதிராக பரபரப்பான இறுதிப் போட்டியில் வாவ்ரிங்கா தனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி மறக்க முடியாத வெற்றியைப் பெற்றார். அவரது வெற்றி டென்னிஸ் உலகில் பெரும் பேசுபொருளாக மாறியது. 

உடல் மற்றும் மனவலிமை: 2015 பிரென்ச் ஓப்பனின் போது வாவ்ரிங்காவின் மனம் மற்றும் உடல் வலிமை முழுமையாக வெளிப்பட்டது. பல கஷ்டமான சூழல்களை எதிர்த்துப் போராடி, அவர் தனது இரண்டாவது கிராஸ்லாம் பட்டத்தை இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான நோவாக் ஜோகோவிச்சை தோற்கடித்ததன் மூலம் வென்றார். இந்த வெற்றி வாவுரிங்காவின் அசைக்க முடியாத உறுதியையும், கடினமான போட்டியாளர்களுக்கு மத்தியிலும் பின்வாங்க மறுத்து வெற்றி பெற்றதை வெளிப்படுத்தியது. 

மைதானத்தில் செய்த சாதனைகளுக்கு அப்பால் வாவ்ரிங்கா தனது பணிவுக்கும், தனித்துவமான விளையாட்டுத் திறமைக்கும் பெயர் பெற்றவர். தனக்குக் கிடைத்த வாய்ப்புகளுக்கு அடிக்கடி நன்றி தெரிவித்து சக டென்னிஸ் வீரர்களுக்கு இப்போது உறுதுணையாக இருந்து வருகிறார். இதனாலேயே டென்னிஸ் சமூகத்தில் பிரியமான நபராகவும் வலம் வருகிறார். 

வாவ்ரிங்காவின் கதை மூலமாக, உறுதியும் கடின உழைப்பும் இருந்தால் பல தடைகளைத் தாண்டி ஒருவரால் சிறப்பான இடத்தை அடைய முடியும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. 

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT