விளையாட்டு

கிரிக்கெட்டில் மிளிரும் ஜாம்பவான்களின் பிள்ளைகள்!

வாசுதேவன்

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஜாம்பவான்களின் பிள்ளைகளும் ஜூனியர் கிரிக்கெட் விளையாட்டில் ஜொலித்துக் கொண்டு வருகிறார்கள். அந்தவகையில் தற்போது ஜொலித்துவரும் இரண்டு ஜூனியர் வீரர்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.

இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனாக திகழ்ந்த ராகுல் டிராவிட் தற்பொழுது இந்திய அணிக்கு கோச்சாக இருந்து வருகிறார். 

Anvay Dravid

இந்நிலையில், இவரது இரண்டாவது மகன் அன்வாய் டிராவிட் 14 வயதுக்குட்பட்ட கிரிக்கெட்டில்  கர்நாடக அணிக்கு கேப்டன் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

samit dravid

இவரது சகோதரர் சமித் டிராவிட். இவரும், முன்பு கர்நாடகாவின் 14 வயதுக்குட்பட்ட அணியில் விளையாடி இரண்டு இரட்டை சதங்களை எடுத்து அசத்தியவர்.

இலங்கை முன்னாள் சூழல் பந்து வீச்சாளராக கலக்கியவர் முத்தையா முரளிதரன்.

naren muralitharan

இவரது மகன் நரேன் முரளிதரன் தனது அட்டகாசமான பேட்டிங்கால் தற்போது கலக்கி வருகிறார். 

சமீபத்தில் 19 வயதுக்குள் உட்பட்டோர் பள்ளி டீமிற்காக விளையாடி சிறந்த வகையில் சிக்சரும், பவுண்டரிகளும் அடித்து அசத்தியுள்ளார். இந்த மேட்ச் டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இவரது பேட்டிங் ஆடும் திறமையை பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

முரளிதரனின் மகன் 171 பந்துகளில் 131 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். 

இந்நிலையில், இளம் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் வாஸ் - முரளிதரன் கோப்பைக்கான போட்டி நடைபெறுகின்றது. 

முரளிதரன் பயின்ற பள்ளியும், வேக பந்து வீச்சாளராக திகழ்ந்த சமிந்த வாஸ் பயின்ற பள்ளியும் மோதிக் கொள்வது வழக்கம். 

இச்சூழலில், முரளிதரன் மகன் நரேன் முரளிதரன் விளையாடுவது, சமிந்த வாஸ் பயின்ற பள்ளியின் அணிக்காக.

முதன் முதலில் 99 ரன்களுக்கு அவுட் ஆன ஆட்டக்காரர்!

டெஸ்ட் மேட்சில் 99 ரன்களுக்கு முதன் முதலில் அவுட் ஆன ஆட்டக்காரர் ஆஸ்திரேலியாவின் சி ஹில் என்பவர்தான். இவர் 1902 ஆம் வருடம் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடும்போதுதான் 99 ரன்களுக்கு அவுட் ஆனார்.

பங்கஜ் ராய், எம் எல் ஜெய்சிம்ஹா, அஜித் வடேகர், ருசி சூர்தி, நவ் ஜோத் சிங் சித்து, சவுரவ் கங்குலி (இரண்டு முறை) வீரேந்திர ஷேவாக், எம் எஸ் தோனி, முரளி விஜய் ஆகிய இந்திய வீரர்கள் 99 ரன்கள் எடுத்து அவுட் ஆனவர்கள். 

டெஸ்ட் மேட்சுகளில் மொஹம்மது அசாருதீன் மற்றும் கே எல் ராகுல் ஆகிய இருவருமே 199 ரன்கள் எடுத்த பொழுது ஆட்டங்களை இழந்த வீரர்கள்.

புகழ் பெற்ற விஸ்டென் புத்தகம்! (Wisden book)

புகழ் பெற்ற விஸ்டென் புத்தகத்தில் பெயர் இடம் பெறுவதை கிரிக்கெட் வீரர்கள் பெருமிதமாகக் கொள்வார்கள். 

வருடத்திற்கு 5 வீரர்களுக்கு இந்த கவுரவம் அளிக்கப்படும்.

1896 ஆம் வருடம் டபிள்யு ஜி கிரேஸ்கு மட்டும் வழங்கப்பட்டது. 

நவாப் ஆப் பட்டோடி (சீனியர்) 1932 ஆம் வருடமும், 1968ல் அவர் மகன் பட்டோடிக்கும் (டைகர்) வழங்கப்பட்டன. 

1931ம் ஆண்டு, டான் பிராட்மேனுக்கும், 1964ல் கார்பீல்ட் சோபர்ஸ்சுக்கும் இந்த கவுரவம் கிடைத்தது.

'கெவ்ரா வாட்டரில்' இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

அதிக நேரம் AC-யில் இருக்காதீங்க ப்ளீஸ்… மீறி இருந்தா? அச்சச்சோ! 

இந்த 7 சொற்றொடர்களைப் பயன்படுத்தினால் நீங்களும் ஒரு புத்திசாலி பெண்தான்!

Cape Rain Frog: வித்தியாசமான தென்னாப்பிரிக்க தவளை இனம்! 

விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

SCROLL FOR NEXT