சமீப காலமாக அதிகமான மக்கள் உடல் நலப் பிரச்னைகளுக்காக இயற்கை வைத்தியங்களில் மூலிகை டீயை அருந்தி வருகின்றனர். அந்த வரிசையில் வெறும் வயிற்றில் கொத்தமல்லி விதை தேநீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. செரிமானம் மேம்படும்: கொத்தமல்லி விதை தேநீர் செரிமான நொதிகளின் உற்பத்தியை தூண்டுவதன் மூலம் செரிமானத்திற்கு உதவி புரிவதோடு, அஜீரணம், வீக்கம் மற்றும் பிற செரிமான பிரச்னைகளை தடுக்க உதவி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கிறது.
2. நச்சுத்தன்மையை நீக்கும்: கொத்தமல்லி விதை தேநீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் இதிலுள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை அகற்றி ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்த உதவுகிறது.
3. எடை குறையும்: கொத்தமல்லி விதை தேநீரில் உள்ள ஆக்சிஜனேற்றிகள் மற்றும் பிற சேர்மங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்பு செல்களின் முறிவை ஊக்குவித்து உடல் எடை குறைக்க உதவுவதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வெறும் வயிற்றில் கொத்தமல்லி விதை தேநீரை பருகலாம்.
4. குறைந்த இரத்த சர்க்கரை அளவு: கொத்தமல்லி விதைகளில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிப்பதால் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க விரும்புவர்களின் மிகச்சிறந்த தேர்வு வெறும் வயிற்றில் கொத்தமல்லி விதை தேநீரை அருந்துவதுதான். மேலும், இது நீரிழிவு நோயுடன் தொடர்புடைய பல்வேறு சிக்கல்களைக் குறைக்கவும் உதவுகிறது.
5. அழற்சி எதிர்ப்புப் பண்புகள்: கொத்தமல்லி விதைகள் உடலில் உள்ள அலர்ஜியை குறைக்க பெருமளவு உதவி செய்வதால் இதனை வெறும் வயிற்றில் குடிப்பது மூட்டு வலி, வீக்கம் போன்ற வீக்கத்தின் அறிகுறிகளை போக்குவதோடு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.
கொத்தமல்லி விதை தேநீரை வெறும் வயிற்றில் குடிப்பது அன்றாட நல்வாழ்வுக்கு மிகவும் உபயோகமாக இருப்பதோடு, பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்கும் என்பதில் சற்றும் ஐயமே இல்லை.