வேகமான இந்த உலகத்தில் தற்போது பெரும்பாலானோருக்கு மன அழுத்தம், மனசோர்வு, பதற்றம் போன்ற உணர்வுகள் இருந்துகொண்டே இருக்கின்றன. இதற்கு மருத்துவ உதவி தேவைப்பட்டாலும் சில உணவுகள் நமது மனநிலை மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அந்த வகையில் மன நிலையை மேம்படுத்தும் ஐந்து உணவுகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. கீரை வகைகள்: கீரை, கேல் மற்றும் சுவிஸ் சார்ட் (பெரும்பாளை கீரை) போன்ற பச்சை இலை கீரைகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளதால் இது மன அழுத்தம் மற்றும் பதற்றத்தின் அறிகுறிகளைக் குறைக்க உதவுவதோடு, நமது மனநிலை மற்றும் உணர்ச்சிகளுக்குக் காரணமான மூளையில் உள்ள நரம்பியக்கடத்திகளை ஒழுங்குபடுத்துவதில் மெக்னீசியம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
2. கொழுப்பு நிறைந்த மீன்: சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளதோடு, அவை அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளதால் இது மனச்சோர்வு மற்றும் பதற்றத்தின் அறிகுறிகளைக் குறைக்க உதவுவதோடு, மூளை செயல்பாட்டிற்கு இன்றியமையாதவையாக உள்ளன.
3. நட்ஸ் மற்றும் விதைகள்: பாதாம், அக்ரூட் பருப்புகள், ஆளி விதைகள் மற்றும் சியா விதைகள் போன்ற நட்ஸ் மற்றும் விதைகளில் மூளை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளதோடு, இதில் ஒமேகா 3கொழுப்பு அமிலங்கள், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் காணப்படுவதால் மனச்சோர்வு மற்றும் பதற்றத்தின் அறிகுறியை குறைக்கின்றன.
4. பெர்ரி பழங்கள்: ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி போன்ற பெர்ரிகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால் இது மனச்சோர்வு மற்றும் பதற்றத்தின் அறிகுறிகளை குணப்படுத்தி, மனநிலையை மேம்படுத்தவும், கவலை உணர்வுகளைக் குறைக்கவும் உதவுகிறது.
5. டார்க் சாக்லேட்: டார்க் சாக்லேட்டில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் போன்ற சேர்மங்கள்உள்ளதால் இவை மனநிலையை ஒழுங்குபடுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் நரம்பியக்கடத்தியான செரோடோனின் அளவை அதிகரிக்க உதவுவதோடு, மனச்சோர்வு மற்றும் பதற்றத்தின் அறிகுறிகளைக் குறைக்கவும் உதவும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
மேலே குறிப்பிட்ட ஐந்து வகை உணவுகளை உண்பதன் மூலமாக நமது மன அழுத்த பிரச்னையில் இருந்து விடுபடுவதோடு, மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.