Simple Drinks to Keep Your Body Hydrated in Summer.
Simple Drinks to Keep Your Body Hydrated in Summer. 
ஆரோக்கியம்

கோடையில் உடலை நீரேற்றத்துடன் வைக்க உதவும் 7 எளிய பானங்கள்!

ஜெயகாந்தி மகாதேவன்

கோடை காலம் வந்துவிட்டாலே உடலுக்கு கூடுதல் கவனிப்பு தரவேண்டியது அவசியம். குறிப்பாக உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். அதிக வெப்பத்தால் உடல் விரைவாக நீரிழப்பை சந்திக்கும் என்பதால், அதை ஈடு செய்வதற்கு நாம் அவ்வப்போது நீர்ச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே இப்பதிவில் கோடைகாலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைக்க உதவும் 7 எளிய பானங்கள் பற்றி பார்க்கலாம்.

  1. தங்கத்தின் தரத்தோடு ஒப்பிடக்கூடியது தண்ணீர்!  உடலின் நீரேற்றத்திற்கு தினசரி எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது அவசியம். அவரவர் உடல் உழைப்பு மற்றும் சுற்றுப்புற உஷ்ணத்தின் அளவுக்கு ஏற்றார்போல தண்ணீரின் அளவை கூட்டியோ குறைத்தோ அருந்தலாம்.

  2. தேங்காய்த் தண்ணீர் அருந்தும்போது அதிலுள்ள எலக்ட்ரோலைட்கள் வியர்வை மூலம் வெளியேறும் சத்துக்களை உடலுக்குள் மீண்டும் இட்டு நிரப்ப உதவுகிறது.

  3. லஸ்ஸி என்பது, யோகர்ட்டுடன் தண்ணீர், சர்க்கரை சேர்த்துக் கடைந்து கப்பில் ஊற்றி மேலே பாலாடை, துருவிய பாதாம் பிஸ்தா சேர்த்து அருந்தும் ஆரோக்கிய பானம். புத்துணர்வும், நீரேற்றமும் தரக்கூடியது.  

  4. வாட்டர் மெலன், கேன்டலோப் (Cantaloupe) அல்லது பெரி வகைப் பழங்களை யோகர்ட் அல்லது பாலுடன் சேர்த்து அரைத்து சுவையான ஸ்மூத்தியாக்கி அருந்தலாம்.

  5. ஃபிரஷ் புதினா, துளசி அல்லது லெமன் கிராஸ் போன்ற மூலிகைகளை கொதிக்கும் நீரில் போட்டு, பின் வடிகட்டி, ஆறியதும் ஐஸ் க்யூப் சேர்த்து ஜில்லுன்னு குடிக்க உடல்  புத்துணர்ச்சியும் குளிர்ச்சியும் நீரேற்றமும் பெறும்.

  6. வெள்ளரி, செலரி, பசலை போன்ற காய்களை மிக்ஸியில் இட்டு அரைத்து வடிகட்டி ஜூஸ்ஸாக அருந்த, நீர்ச் சத்துடன் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்களும் கிடைக்கும்.

  7. பாரம்பரிய இந்திய உணவானது மோர். தயிரில் தண்ணீர் சேர்த்துக் கடைந்து வெண்ணெய் எடுத்த பின் கிடைப்பது. லேசான புளிப்பு சுவை கொண்ட பானம். இதில் எலக்ட்ரோலைட்கள் மற்றும் ப்ரோபயோடிக்ஸ் அதிகம். இதனுடன் சீரகம் மற்றும் புதினா போன்ற ஸ்பைஸஸ் சேர்த்து அருந்தும்போது ஆரோக்கியம் கூடும்.

மேலே குறிப்பிட்ட எளிய பானங்களை வீட்டிலேயே தயாரித்து அடிக்கடி அருந்தி வர உடல் டீஹைட்ரேட் ஆகாமல் ஆரோக்கியத்துடன் இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் கிடையாது.

நீங்க சீக்கிரமா உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்றீங்களா? ப்ளீஸ், இது மட்டும் வேண்டாமே! 

காகத்திற்கு உணவு வைப்பதன் அவசியம் என்னவென்று தெரியுமா?

அமிதிஸ்ட் கற்களைப் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

SCROLL FOR NEXT