9 Great Foods That Relieve mental worry https://swsphn.com
ஆரோக்கியம்

மனக்கவலைகளை மாற்றும் மகத்தான 9 உணவுகள்!

ஜெயகாந்தி மகாதேவன்

ம்மில் பல பேருக்கும் நாளை என்ன நடக்குமோ என்ற  எதிர்பார்ப்பும் அதைப் பற்றின கவலைகளும் எப்பொழுதும் மனதிற்குள் ஓர் அரிப்பையும் நிதானமின்மையையும் உண்டு பண்ணிக்கொண்டே இருக்கும். அந்த மாதிரியான உணர்வுகளிலிருந்து வெளியேறவும் அன்றாட வேலைகளில் அமைதியாக ஈடுபடவும்  உதவும் ஒன்பது வகை உணவுகளையும் அவற்றை நாம் உட்கொள்ளவேண்டிய அவசியத்தைப் பற்றியும் இந்தப் பதிவில் பார்ப்போம்.

* ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சால்மன் மீனானது மூளையின் மேம்பட்ட ஆரோக்கியத்திற்கு உதவக்கூடியது. அதை உண்பதால் மனக் கவலைகள் நீங்கி நல்ல மூட் உருவாகும் என்பது திண்ணம்.

* கெமோமைல் (Chamomile) டீ, நரம்புகளை அமைதிப்படுத்தி, அவற்றை ஆரோக்கியமாய் செயல்படத் தூண்டும் குணம் கொண்டது.

* டார்க் சாக்லேட்களில் உள்ள ஃபிளவனாய்ட்கள், உடம்பில் ஸ்ட்ரெஸ் உண்டாக்கக் கூடிய ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைக்கவும், நல்ல மனநிலையை உருவாக்கவும் உதவக்கூடிய குணங்கள் கொண்டவை.

* யோகர்ட் மற்றும் அதுபோன்ற நொதிக்கச் செய்த உணவுகளில் ப்ரோபயோட்டிக்குகள் அதிகம் நிறைந்துள்ளன. அவை ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவி புரிந்து செரிமானம் சிறக்கச் செய்கின்றன. சீரான செரிமானம் மூளையின் செயல்பாடுகளுடன் தொடர்புடையதாய் இருப்பதால், கவலைகள் குறைந்து நல்ல மனநிலை உருவாகும் வாய்ப்பு உண்டாகிறது.

* பசலைக் கீரை, காலே, சுவிஸ் சார்டு போன்ற உணவுகளில் மக்னீசியம் சத்து மிகுந்துள்ளது. இவற்றை உண்பதால் கவலைகள் நீங்கும்; நரம்பு மண்டலம் தளர்ச்சி பெற்று படபடப்பின்றி இயங்கும்.

* அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அடங்கிய ப்ளூபெரி பழங்கள் உடம்பிலுள்ள ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ்ஸை எதிர்த்துப் போராடி, மனக்கவலைகள் மற்றும் மூட் சம்பந்தப்பட்ட கோளாறுகளை நிவர்த்தி செய்ய உதவி புரிகின்றன.

* மக்னீசியம் மற்றும் சிங்க் சத்துக்கள் ஆல்மண்டில் அதிகம். இந்த இரண்டு சத்துக்களும் மனக் கவலைகளைக் குறைத்து நல்ல மனநிலையை உண்டுபண்ண உதவுபவை.

* இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்கக் கூடிய சக்தி ஓட் மீலில் உள்ள காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட் சத்துக்களுக்கு உண்டு. இவை நேர்மறை எண்ணங்களை உருவாக்கி நல்ல மனநிலையை உண்டுபண்ணவும் சக்தியின் அளவை உயர்த்தவும் உதவுகின்றன.

* க்ரீன் டீயில் எல்.தியானின் (L-Theanine) என்றொரு அமினோ அமிலம் உள்ளது. இது மனதை அமைதி கொள்ளச் செய்து கவலைகளையும் ஸ்ட்ரெஸ்ஸையும்  குறையச் செய்ய உதவுகிறது.

பிக்கி உண்டியலின் வரலாறு தெரியுமா?

வேகமாகச் சுழலும் இறந்த நியூட்ரான் நட்சத்திரத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்! 

இன்சுலின் சுரப்பை இயற்கையாக சீராக்க உதவும் எளிய உணவுகள்!

உடலில் மருக்கள் இருந்தால் சாதாரணமாக நினைக்காதீங்க… ஜாக்கிரதை! 

கனக விநாயகர் கணக்கு விநாயகர் ஆன கதை தெரியுமா?

SCROLL FOR NEXT