Black Garlic Benefits.
Black Garlic Benefits.  
ஆரோக்கியம்

7 நாட்கள் கருப்பு பூண்டு சாப்பிடுங்கள்.. அதிலிருந்து கிடைக்கும் நன்மைகளை நீங்கள் நம்ப மாட்டீர்கள்!

கிரி கணபதி

இதுவரை நீங்கள் வெள்ளைப் பூண்டு பார்த்திருப்பீர்கள் ஆனால் கருப்பு பூண்டு என்று ஒரு வகை உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா?. அதாவது வெள்ளை பூண்டை நொதித்தல் செயல்முறைக்கு உட்படுத்தி அதை கருப்பாக மாற்றுவார்கள். இதனால் அதன் சுவை இனிப்பாக மாறி பல மருத்துவக் காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் கீழ் வாரக்கணக்கில் பூண்டை புளிக்க வைப்பதால் அதன் நிறம், அமைப்பு அனைத்துமே மாறுகிறது. இது வழக்கமான பூண்டை விட மென்மையாக இருப்பதால் சாப்பிட சுவையாக இருக்கிறது. இதில் சாதாரண பூண்டை விட பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது என்பதை நாம் கட்டாயம் அறிய வேண்டும்.

புற்றுநோயை எதிர்க்கும்: கருப்பு பூண்டின் சாறு புற்று நோய்க்கு எதிராக செயல்படும் என பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் புற்றுநோய் வளர்ச்சியை தடுப்பதில் பங்களிக்கிறது. இருப்பினும் இது சார்ந்து கூடுதலான ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. இது மென்மையாக மெல்லும் உணர்வைக் கொடுப்பதால், உடல் முழுவதும் எளிதாக பரவி பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. 

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: கருப்பு பூண்டில் அலிசின் போன்ற பல ஆரோக்கிய கலவைகள் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு ஆதரவாக செயல்படுகிறது. இதனால் நோய் தொற்றுகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து உடலை பாதுகாத்து ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்க உதவுகிறது. 

எடை குறைக்க உதவும்: இந்த பூண்டில் காணப்படும் சில ரசாயனக் கலவைகள் நம்முடைய வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகிறது. இதனால் எடையை குறைக்க விரும்புபவர்கள் கருப்பு பூண்டு சாப்பிட்டு வந்தால் நல்ல எடை மேலாண்மைக்கு உதவும். 

இதயத்தை பாதுகாக்கும்: சில ஆய்வுகளின் படி கருப்பு பூண்டு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது. இதை தொடர்ச்சியாக சாப்பிடும்போது கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தம் குறைவதால் இதய நோய்க்கான அபாயம் பெரும்பாலும் குறைகிறது. 

ஆக்சிஜனேற்றம்: கருப்பு பூண்டில் பல்வேறு வகையான ஆக்சிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளது. இதனால் உடலில் ஏற்படும் ஆக்சிஜனேற்ற அழுத்தம் குறைந்து ஃப்ரீ ராடிக்கல்களை நடுநிலையாக்கி நோய்களை குணப்படுத்தும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் தன்மையை அதிகரிக்கிறது. 

குறைந்தது 7 நாட்கள் இந்த கருப்பு பூண்டை நீங்கள் சாப்பிட்டு வந்தாலே உடலில் ஏற்படும் மாற்றத்தை கண்கூடாகப் பார்க்கலாம். எனவே இதை உங்களுடைய உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். மேலும் எந்த உணவாக இருந்தாலும் அதை புதிதாக முயற்சிப்பதற்கு முன் தகுந்த மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று முயற்சிப்பது நல்லதாகும். 

உங்கள் சருமத்திற்கு ஏற்ற சரியான சீரம் எப்படி தேர்வு செய்வது தெரியுமா? 

துப்புரவுப் பணியாளர்களுக்கு துணை நிற்போம்!

அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க செய்யக்கூடிய 9 எளிய விஷயங்கள்!

கைவசம் வசம்பு... இனி நோ வம்பு!

பாகுபலி பிரபாஸுக்கு திருமணமா? இன்ஸ்டா ஸ்டோரி வைரல்!

SCROLL FOR NEXT