intermittent fasting heart attacks 
ஆரோக்கியம்

Intermittent fasting இருப்பதால் மாரடைப்பு ஏற்படுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

கிரி கணபதி

Intermittent fasting எனப்படும் இடைப்பட்ட உண்ணாவிரதம், எடை இழப்பு, மேம்பட்ட வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கான உணவு அணுகுமுறையாகும். இருப்பினும் இத்தகைய உண்ணாவிரத முறையில் மாரடைப்பு ஏற்படும் என சொல்லப்படுவது மிகப்பெரும் கவலையாகப் பார்க்கப்படுகிறது. இந்த பதிவில் அதுசார்ந்த உண்மைகளை கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்போம். 

இடைப்பட்ட உண்ணாவிரதம் (Intermittent fasting) என்றால் என்ன?

இடைப்பட்ட உண்ணாவிரதம் என்பது நாம் உணவு உண்ணும் நேரத்திற்கு இடைப்பட்ட காலத்தில் அதிக இடைவெளி கொடுக்கும் ஒரு உணவு முறையாகும். பொதுவாக இந்த வகையான உண்ணாவிரத முறையில், 16 மணி நேரத்திற்கு எதையும் சாப்பிடாமல், மீதமுள்ள 8 மணி நேரத்தில் போதிய உணவை எடுத்துக் கொள்வார்கள். இந்த முறையில் ஐந்து நாட்களுக்கு எப்போதும் போல உணவை எடுத்துக் கொள்வார்கள். மீதமுள்ள இரண்டு நாட்களில் கலோரிகளை கட்டுப்படுத்துவார்கள். இந்த உணவு முறை பழக்கத்தின் மூலமாக, உடல் எடை இழப்பு, மேம்பட்ட இன்சுலின் உற்பத்தி மற்றும் பல ஆரோக்கிய நன்மைகள் ஏற்படும் எனக் கூறுகின்றனர்.

இடைப்பட்ட உண்ணாவிரதம் மாரடைப்பை ஏற்படுத்துமா? 

உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவு ஆகியவை இதய நோய்க்கான ஆபத்து காரணிகளாகப் பார்க்கப்படுகிறது. இடைப்பட்ட உண்ணாவிரதம் மூலமாக ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் குறைக்கப்பட்டு, பல நன்மைகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே Intermittent fasting முறையானது உண்மையிலேயே இதயத்துக்கு ஆரோக்கியமான நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

இடைப்பட்ட உண்ணாவிரதம் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துவதாக சொல்லப்படுகிறது. இது ரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க முக்கியமானது. இதன் மூலமாக உடலில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகரிப்பதால், உடலில் ஏற்படும் வீக்கம், நாள்பட்ட இதய நோய்கள் போன்றவை சரியாகிறது. 

அதிக எடை மற்றும் உடல் பருமன், இதய நோய்க்கான முக்கிய காரணிகளாகும். இடைப்பட்ட உண்ணாவிரதம் இருப்பது மூலமாக உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் நீக்கப்பட்டு, உடல் எடை குறைகிறது. இதன் மூலம் மாரடைப்பு மற்றும் பிற இருதய பாதிப்புகளின் ஆபத்துகள் குறைகிறது. 

Intermittent fasting இருப்பதால் இதயத்துக்கு நல்லதுதான் என்றாலும் இது அனைவருக்கும் ஏற்றது அல்ல என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக ஏற்கனவே சில சுகாதார நிலைமைகளை எதிர்கொண்டு வரும் நபர்கள் இவற்றை முயற்சிக்க வேண்டாம். குறிப்பாக நீரிழிவு நோய், நாள்பட்ட உடல் சார்ந்த பாதிப்புகள் உள்ளவர்கள் இத்தகைய உண்ணாவிரத முறையை தொடங்குவதற்கு முன் ஒரு சுகாதார நிபுணர்வுடன் கலந்தாலோசிக்க வேண்டும். 

மேலும் இந்த உண்ணாவிரத முறை இருக்கும்போது உடலுக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் எடுத்து கொள்கிறீர்களா என்பதில் கவனம் செலுத்தி, சரியான அணுகு முறையில் இவற்றை கையாள்வது நல்லது. Intermittent fasting இருப்பதால் பெரிய ஆபத்துக்கள் எதுவும் வந்துவிடாது. தேவையில்லாமல் மக்களை குழப்பம் கட்டுக்கதைகளை நம்பி நல்ல விஷயங்களை விட்டு விடாதீர்கள். இடைப்பட்ட உண்ணாவிரதம் உண்மையிலேயே ஆரோக்கியமானது. இதனால் மட்டுமே மாரடைப்பு ஏற்படும் என்பதற்கான எவ்வித சான்றுகளும் கிடையாது.

பெற்றோர்கள் பெறும் விவாகரத்து; பிள்ளைகளுக்குத் தரும் தண்டனை!

ஸ்கிசோஃப்ரினியா காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள்!

நீங்கள் சாப்பிடுவது தூய்மையான கோதுமையே இல்லை… உண்மைய முதலில் தெரிஞ்சுக்கோங்க!

நீங்கள் தினமும் Mouth wash பயன்படுத்துபவரா? அச்சச்சோ ஜாக்கிரதை!

நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களுக்கு சொத்தை எழுதிக் கொடுத்த நடிகர்! அடடே யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT