Curd 
ஆரோக்கியம்

மழைக்காலத்தில் தயிர் சாப்பிடலாமா? - ஒரு விரிவான ஆய்வு! 

கிரி கணபதி

மழைக்காலம் என்றாலே உடல் நலம் குறித்த கவலைகள் அதிகரிக்கும். குறிப்பாக, என்ன உணவு சாப்பிடலாம், என்ன சாப்பிடக்கூடாது என்ற சந்தேகம் அதிகமாக எழும். இவற்றில், மிக முக்கியமான ஒன்றுதான் தயிர். தயிர் என்பது நம் உணவில் முக்கிய இடம் பிடிக்கும் ஒரு உணவுப் பொருள். ஆனால், மழைக்காலத்தில் தினமும் தயிர் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? என்ற கேள்விக்கு பலரும் பல்வேறு விதமான பதில்களைக் கூறுகின்றனர். 

ஒருபுறம் தயிரில் நிறைந்திருக்கும் நன்மை தரும் பாக்டீரியாக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மறுபுறம் மழைக்காலத்தில் தயிர் சாப்பிடுவதால் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இந்தக் குழப்பத்தை தெளிவுபடுத்தும் வகையில் மழைக்காலத்தில் தயிர் சாப்பிடுவதன் நன்மை தீமைகள் பற்றி இந்தப் பதிவில் விரிவாகக் காண்போம்.‌ 

தயிரின் நன்மைகள்: தயிர் என்பது பால் பொருட்களில் ஒன்று. இது பாலில் உள்ள லாக்டோஸ் நொதித்து உருவாகிறது. தயிரில் புரதம், கால்சியம், விட்டமின் பி12, வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் இதில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் நமது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. இதனால், வயிற்றுப்போக்கு மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது. 

தயிர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நம்மை நோய் தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கிறது. இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தயிரில் கால்சியம் அதிகமாக இருப்பதால், எலும்புகள் வலுவாகி எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் குறைகிறது. தயிர் ஒரு நிறைவுற்ற உணவு என்பதால் இதை சாப்பிட்டால் பசி எளிதில் அடங்கும். இது எடை இழப்புக்கு உதவும். 

மழைக்காலத்தில் தயிர் சாப்பிடுவதன் தீமைகள்: 

மழைக்காலத்தில் தயிர் சாப்பிடுவதால் சில தீமைகள் ஏற்படலாம் என்ற கருத்து நிலவுகிறது. குறிப்பாக சளி இருமல் போன்ற பிரச்சினைகள் அதிகரிக்கும் என பொதுவாக சொல்வார்கள். ஆனால், இதற்கு எவ்விதமான அறிவியல் ஆதாரமும் இல்லை. மழைக்காலத்தில் செரிமான சக்தி குறைவதால் தயிர் போன்ற குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவது செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். சிலருக்கு மழைக்காலத்தில் அதிகமாக தயிர் சாப்பிடுவதால் சருமத்தில் அரிப்பு, கொப்புளங்கள் போன்ற அலர்ஜி பிரச்சனைகள் ஏற்படக்கூடும். 

உண்மை என்ன? 

மழைக்காலத்தில் தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனை என்பது தனிநபரின் உடல்நிலை, உணவுப்பழக்க வழக்கங்கள் மற்றும் தயிரின் தரம் போன்ற பல காரணிகளைப் பொறுத்து மாறுபடும். உடலில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் மழைக்காலத்தில் தாராளமாக தயிர் சாப்பிடலாம். செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் மழைக்காலத்தில் தயிரை குறைவாகவே சாப்பிட வேண்டும். இது தவிர பால் அல்லது பால் பொருட்களுக்கு அலர்ஜி பிரச்சனை இருப்பவர்கள், தயிரை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது.‌ 

திரைத்துறையில் ஒரு மாபெரும் கவிஞனின் பங்கு!

வருந்தும் மரத்தை தெரிந்து கொள்வோம் வாருங்கள்!

உங்களை மற்றவர்கள் Demotivate செய்வதை எப்படி கையாள வேண்டும் தெரியுமா?

ராமன் 'சாப்பாட்டு ராமன்' ஆன கதை தெரியுமா மக்களே!

News 5 – (05.10.2024) ‘மூவாயிரம் ரயில் சேவைகள் தொடங்கப்படும்‘: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!

SCROLL FOR NEXT