சிட்ரஸ் பழங்கள் 
ஆரோக்கியம்

நுரையீரலைப் பாதுகாக்கும் சிட்ரஸ் பழங்கள்!

கல்கி டெஸ்க்

-நித்தீஷ்குமார் யாழி

ன்றைய சுற்றுச்சூழல் மிகவும் மோசமாகிக்கொண்டு வருகிறது. இதனால் காற்றில் கலந்திருக்கும் தொற்றுகள், தூசுக்கள் சுவாசம் மூலம் எளிதில் நுரையீரலுக்குள் ஊருடுவி பாதிப்பை ஏற்படுத்திவிடும். இந்த நிலையில் நுரையீரலின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இப்படி நாம் கவனம் செலுத்த வேண்டியவை உணவின் மூலமாகவும்கூட செலுத்தலாம். அப்படி நாம் நுரையீரல் பாதுகாப்புகாக சாப்பிட வேண்டிய உணவு பின்வருமாறு

சிட்ரஸ் பழங்கள்:

ரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற பழங்களில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது.  இவை சுவாச நோய்த் தொற்றுகளுக்கு எதிராக போராடி, சுவாசத்தை மேம்படுத்தக்கூடியவை.  இவற்றை சிற்றுண்டியாகவோ அல்லது ஜூஸாகவோ தயாரித்து உட்கொள்ளலாம்.

பச்சை காய்கறிகள்:

கீரை, முட்டைக்கோஸ் போன்றவற்றை எளிதாக சமைத்து சாப்பிடலாம். இவற்றில் நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு போதுமான வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன.

அரிசி மற்றும் தானியங்கள்:

கைக்குத்தல் அரிசி மற்றும் பயிர்வகைகள், தானியங்கள் போன்றவற்றில் ஆன்டிஆக்ஜிசன் வைட்டமின் ஏ போன்றவை நிறைந்திருக்கிறது. இவை நுரையீரல் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தக்கூடியவை.

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி:

திலிருக்கும் அதிக நார்ச்சத்து நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தை எதிர்த்து போராட உதவி புரியும்.  அத்துடன் சல்போராபேன் என்னும் சேர்மம் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களையும் அழிக்க துணை புரியும்.

இஞ்சி:

நுரையீரலில் நச்சுக்கள் படியாமல் இருக்க இஞ்சி உட்கொள்வது சிறந்த வழியாகும்.  நுரையீரலில் இருக்கும் மாசுக்களை அகற்றும்.  காற்றுப்பாதையில் ஏற்படும் நெரிசலை குறைக்கவும் இஞ்சி உதவும். எலுமிச்சைசாறு, தேன், சிறிதளவு இஞ்சி ஆகியவற்றை நீரில் கொதிக்கவைத்து பருகலாம்.

இவை நுரையீரலிற்கு நன்மை செய்யும் உணவு ஆகும்.

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அச்சச்சோ ஜாக்கிரதை!

மறுபடியும் சூடுபடுத்தி இந்த உணவையெல்லாம் சாப்பிடாதீங்க ப்ளீஸ்!

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

SCROLL FOR NEXT