Complete Health Benefits of Mul seetha Fruit! https://tamil.oneindia.com
ஆரோக்கியம்

முள் சீத்தா பழத்திலிருக்கும் முழுமையான ஆரோக்கிய நன்மைகள்!

ஜெயகாந்தி மகாதேவன்

சோர்சாப் (Soursop) எனப்படும் முள் சீத்தா பழமானது அமேசான் காடுகளைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் அபூர்வப் பழம். இதில் அடங்கியிருக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

இதிலுள்ள வைட்டமின் B சத்தானது மூச்சுகுழாய் அழற்சியைப் போக்கும். ஆஸ்துமா நோயை அண்ட விடாது. நோய் வரவழைக்கக் கூடிய தொற்றுக்களை எதிர்த்துப் போராடும். நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். பிற நோய்களையும் குணமாக்க வல்லது.

வைட்டமின் C மற்றும் ரிபோஃபிளேவின் சத்துக்களானது கண் ஆரோக்கியத்தைப்  பாதுகாக்கின்றன. இந்தப் பழத்தில் வைட்டமின் A, புரோட்டீன், வைட்டமின் B காம்ப்ளெக்ஸ், நார்ச்சத்து போன்றவை அதிகளவில் உள்ளன. இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்களானது புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றலுடையவை. வயிறு, மார்பு, நுரையீரல், கணையம், மலக்குடல் சம்பந்தப்பட்ட புற்றுநோயைக் குணப்படுத்தும்.  இக்குணத்தினால் இதை 'பக்க விளைவில்லா கீமோதெரபி தரும் பழம்' என்றும் கூறுவர். அதிகளவு மருத்துவ குணம் கொண்டதால் இப்பழத்தை அளவோடு உண்பதே நலம் பயக்கும்.

அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் பார்க்கின்சன் என்னும் நரம்புப் பிரச்னை உண்டாகும் வாய்ப்புள்ளது. இதிலுள்ள நார்ச்சத்துக்களானது நல்ல முறையில் உணவு ஜீரணமாக உதவி புரிகின்றன. வயிறு, குடல் போன்ற உறுப்புகளுக்கு நல்ல ஆரோக்கியம் தரவும் மலச்சிக்கலைத் தடுக்கவும் செய்கின்றன.

இந்தப் பழத்திலுள்ள பொட்டாசியமானது இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்து இதயம் ஆரோக்கியத்துடன் இயங்க உதவுகிறது. இதய வால்வுகளும் சிறப்பாக செயல்பட துணை புரிகிறது. இதன் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமானது, உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து மொத்த உடலும் நலம் பெறச் செய்கிறது.

இத்தனை நற்பயன்கள் தரக்கூடிய முள் சீத்தா பழத்தை நாமும் அளவுடன் உண்டு ஆரோக்கியம் பெறுவோம்.

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

உன்னால் முடியும் பெண்ணே! இந்த 5 அடிப்படை விஷயங்கள் இருந்தால் போதுமே!

Dear Girls… உங்கள் தொப்பையை மறைக்க இப்படி ட்ரெஸ் பண்ணுங்களேன்!

'இளமையில் கல்' என்பதன் அர்த்தமும் அதன் புரிதலும்... இது ரொம்ப தப்பாச்சே!

‘எப்படி இருக்கீங்க?’ - ‘ஏதோ இருக்கிறேன்!’ எதுவும் இயங்கினால் மட்டுமே உயிர்ப்பு!

SCROLL FOR NEXT