ஆரோக்கியம்

இலந்தை பழம் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்!

புவனா நாகராஜன்

இலந்தை பழம் சாப்பிடமட்டுமே உகந்தது என நினைக்கிறோம் ஆனால் அதன்மரம் இலை பூ பழம் எல்லாமே சுவையோடு கூடிய பயன்தரவல்லது. உடல் உஷ்ணத்தை நீக்கவல்ல மருத்துவ குணம் அதிகம் கொண்டது.

உடல் உஷ்ணத்தாலோ அல்லது வேறு உபாதைகளால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் இலந்தை மரத்தின் கொழுந்து இலையை மூன்று கைப்பிடி அளவு எடுத்துநீாில் சுத்தம் செய்து அந்த கொழுந்துடன் சிறியவெங்காயம்,மற்றும் சீரகத்தை கலந்து பாத்திரத்தில் போட்டுஇரண்டு டம்ளா் தண்ணீா் விட்டுஅரை டம்ளராகநன்கு சுண்ட காய்ச்சி மூன்று வேளை சாப்பிட்டுவர வயிற்றுப்போக்கு குணமாகும்.

கை கால் மற்றும் உடலில் வெட்டுக்காயம் பட்டால் இலந்தை இலையுடன் மஞ்சள் பொடி சோ்த்து அரைத்து புண்களின் மீது தடவி வர புண்கள் ஆறிவிடும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இலந்தை பொடியை நன்கு தண்ணீா்விட்டு பிசைந்து சிறிய சிறிய அடைகளாக தட்டி வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக்கொண்டு தேவையான எலந்தை அடையை கரைத்து நாட்டுசா்க்கரை கலந்து பச்சடி யாக செய்து காரக்குழம்பு சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம் நல்ல சுவை மட்டுமல்ல பித்த நோயை கட்டுப்படுத்தும்ஆற்றல் கொண்டது.

கடுமையயான வெயில் காலங்களில் சிலருக்கு எாிச்சல் ஏற்படும் அதற்கு தீா்வு எலந்தை பூவை அம்மியில் தண்ணீா் விட்டுஅரைத்து உடம்பில் தேய்த்து வர எாிச்சல் அடங்கும்.

புளிப்பான எலந்தைப்பழத்தை சாப்பிடக்கூடாது இனிப்பான பழத்தை மட்டுமே சாப்பிடவேண்டும்.

எலந்தை பழத்தில் ஏ விட்டமின் சத்து உள்ளது அதோடு கால்சியம் சத்தும் நிறைந்தது.

எலும்புகளுக்கு பலத்தை கொடுக்க வல்லது பற்களும்உறுதியாகும் இலந்தை பழம் சாப்பிட்டு வர மாா்பு வலி யை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது

எலந்தைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவது அவ்வளவு நல்லதல்ல அதே நேரம் பழத்தை சாப்பிட்டதும் உடனேதண்ணீா் குடிக்கக் கூடாது.

சிறிய பழமானாலும் சத்து அதிகம் நிறைந்தது.

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

SCROLL FOR NEXT