Do you know the role of vitamin D in health?
Do you know the role of vitamin D in health? https://www.neotamil.com
ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் வைட்டமின் டியின் பங்கு தெரியுமா?

கல்கி டெஸ்க்

னித உடலில் வைட்டமின் டி முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏனெனில், இது கால்சியம் அல்லது பாஸ்பரஸ் தாதுக்களை உறிஞ்சுவதை ஊக்குவிக்கிறது. இது எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்தவும், டைப் 1 நீரிழிவு நோய், மல்டிபிள் ஸ்க்ளீரோசிஸ் மற்றும் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

இப்படிப்பட்ட வைட்டமின் டி பெறுவதற்கு தினமும் நாம் குறைந்தது 20 நிமிடங்களாக காலை, மாலை சூரிய ஒளிபடும்படி நிற்க வேண்டியது அவசியம். இப்படிச் செய்வதால் நமது உடலில் வைட்டமின் டி உற்பதியாக உதவும். இந்நிலையில், வைட்டமின் டி மட்டுமல்ல, நல்ல உறக்கம், ஆரோக்கியமான சருமம், வலுவான தசைகள், வலுவான எலும்பு, நோய் எதிர்ப்பு சக்தி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

வைட்டமின் டி சத்து உடலில் குறைவாக உள்ளவர்கள் குறைந்தது  20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை காலை, மாலை வெயிலில் நிற்கலாம். அதேபோல், காலை 10 முதல் 4 மணி வரை உள்ள வெயில் மிகவும் கடுமையாக இருப்பதால், நமது சருமம் சூரியக் கதிர்களின் வெப்பத்தால் பாதிக்கப்படும். அதிக வெயில் இருக்கும்போது நாம் முகத்தை மூடுவது அல்லது சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது.

டஸ்கி சருமம் உடையவர்கள் 30 நிமிடங்கள் வரை வெயிலில் நிற்க வேண்டும். இவர்கள் உடலில் உள்ள அதிக மெலனின் சூரிய ஒளியை மெதுவாக உள்வாங்கும். குளிர் பிரதேச நாடுகளில் அல்லது இடங்களில் 2 முதல் 3 மணி நேரம் வரை வெயிலில் நிற்க வேண்டும். இந்த வைட்டமின் டி வயதானவர்களுக்கும் நல்லது. முதுமையில் மூளையை சுறுசுறுப்பாக வைத்து, அவர்களின் சரியான உணர்வுகளை பராமரிக்க இது உதவுகிறது.

பலவீனமான எலும்புகளுக்கு சிகிச்சையளிப்பது, ரிக்கெட்ஸ் சிகிச்சை, ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் ஆஸ்டியோமலாசியா சிகிச்சை, எலும்பு முறிவுகள், உயர் இரத்த  அழுத்தம், நாள்பட்ட அடைப்புக்குரிய நுரையீரல் நோய் (சிஓபிடி). நீரிழிவு, தசை பலவீனம், முடக்கு வாதம், மல்டிபிள் ஸ்க்ளீரோசிஸ், மாதவிடாய் முன் நோய்க்குறி (பிஎம்எஸ்), உடல் பருமன், மூச்சுக்குழாய் அழற்சி, பல், ஈறு நோய் மற்றும் உயர் இரத்தக் கொதிப்பு நோய் ஆகியவற்றை மேம்படுத்தவும் மருத்துவர்கள்  வைட்டமின் டியை பரிந்துரைக்கின்றனர்.

- நிதிஷ்குமார் யாழ்

தேனுடன் லவங்கப்பட்டை சேர்ந்து வழங்கும் 11 அற்புதப் பலன்கள்!

சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கனமழையின் போது ஏசி பயன்படுத்தலாமா? நன்மைகளும், தீமைகளும்! 

நதியின் நடுவில் ஈரக் கருவறை உள்ள கோயில் எது தெரியுமா?

ஒருவர் ஏன் கட்டாயம் மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

SCROLL FOR NEXT