Foods suitable for senior citizens 
ஆரோக்கியம்

சீனியர் சிட்டிசன்கள் உண்பதற்கு உகந்த உணவுகள்!

ஜெயகாந்தி மகாதேவன்

ருடம்தோறும் நம் நாட்டில் முதியோர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருப்பதை புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்நிலையில் மற்றவர்களுக்கு பாரமாகாமல் உடலைப் பாதுகாக்க முதியோர்கள் உண்ண வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

அதிகளவு கால்சியமும் மற்ற ஊட்டச் சத்துக்களும் நிறைந்த பால் அருந்துவதால் அவர்களின் எலும்பு ஆரோக்கியம் பெற்று ஆஸ்டியோபொரோசிஸ் என்ற எலும்பு நோய் வருவதை தடுக்கவும், எலும்பு முறிவு ஏற்படாமல் பாதுகாக்கவும் முடியும்.

உடலின் மொத்த எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், நாள்பட்ட வியாதிகள் வருவதைத் தடுக்கவும், கால்சியத்தை உறிஞ்சவும் உதவக்கூடிய ஆரஞ்சு போன்ற பழங்களையும் அதிகளவு காய்கறிகளையும் முதியவர்கள் உட்கொள்வது அவசியம்.

அனீமியா நோய் வருவதைத் தடுக்கவும், இரத்தம் மற்றும் நரம்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கக்கூடியதுமான வைட்டமின் B12 சத்தை உடல் உறிஞ்சி எடுக்க வயதானவர்களுக்கு சிரமம் ஏற்படும். அந்த மாதிரி நிலையில் உள்ளவர்கள் சப்ளிமென்ட் (Supplement) எடுத்துக்கொள்வது அவசியம்.

நார்ச்சத்து அடங்கிய கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை அவர்கள் அதிகளவு எடுத்துக் கொள்வது அவசியம். ஏனெனில், அவை இரத்த சர்க்கரை அளவை சமப்படுத்தி, கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவுகின்றன. அதன் மூலம் இதய நோய் வரும் அபாயம் தவிர்க்கப்படுகிறது.

மீன், முட்டை, பசலைக் கீரை, வால்நட் போன்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அடங்கிய உணவுகள் அவர்களின் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதய இரத்த நாளங்களைப் பாதுகாக்கவும் உதவும். மூளையின் செயல் திறனை ஊக்குவித்து அறிவாற்றலை அதிகரிக்கச் செய்யும்.

பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழம் இரத்த அழுத்தத்தை சம நிலையில் வைக்க உதவும். தசைகளுக்கு நல்ல ஆரோக்கியம் கொடுத்து, நரம்புகளின் செயல்பாடுகளையும் சிறப்புறச் செய்யும்.

ஆரஞ்சு, ஸ்ட்ராபெரி, உருளைக் கிழங்கு, ப்ரோக்கோலி, ப்ரஸ்ஸல்ஸ் போன்ற வைட்டமின் C அடங்கிய உணவுகள் நோயெதிர்ப்புச் சக்தியை வழங்குபவை. இவை இரும்புச் சத்தை உறிஞ்சவும் உதவுகின்றன. வைட்டமின் K இரத்த நாளங்களுக்குள் உண்டாகும் உறைவை தடுக்கும்.

புரோட்டீன், மெக்னீசியம் நிறைந்த உணவுகளும் தசைகள் மற்றும் எலும்புகளுக்கு ஆரோக்கியம் கொடுக்கின்றன. நல்ல தூக்கத்தையும் வழங்க வல்லவை.

மேற்கூறிய உணவுகளை முதியவர்கள் உட்கொண்டால் அவர்களது ஆயுள் நீடிக்கும்.

குழந்தைகளுக்கு அதிகமாக பவுடர் பூசுகிறீர்களா? தாய்மார்களே உஷார்!

மூலவர்கள் இருவர்; உத்ஸவர்கள் ஐவர்: எந்தக் கோயிலில் தெரியுமா?

வெண்டைக்காயை சுவையாக சமைக்க சில டிப்ஸ்!

ஸ்வெட்டர்களின் சுவாரஸ்யமான வரலாறு பற்றி தெரியுமா?

மாயன்களின் வரலாறு என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT