Is it okay for people over 50 to skip lunch? 
ஆரோக்கியம்

50 வயதைக் கடந்தவர்கள் மதிய உணவைத் தவிர்ப்பது சரியா?

கிரி கணபதி

50 வயதைக் கடந்தவர்கள் தங்கள் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தை பராமரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். உணவு முறையில் மாற்றம் செய்வது, உடற்பயிற்சி செய்வது, போதுமான தூக்கம் போன்றவை இதில் மிகவும் முக்கியமானவை. சில 50 வயதை கடந்தவர்கள் தங்களின் எடையை குறைக்க அல்லது தங்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மதிய உணவை தவிர்க்க நினைக்கின்றனர். ஆனால் இவ்வாறு செய்வது சரிதானா?  என்பதில் பலருக்கு சந்தேகம் இருக்கிறது. இதன் முழு விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம். 

50 வயதிற்கு மேற்பட்டவர்கள் மதிய உணவைத் தவிர்ப்பதில் சில குறிப்பிட்ட நன்மைகள் உள்ளன. இது அவர்களின் அதிகப்படியான கலோரி உட்கொள்ளலைக் குறைத்து எடை இழப்புக்கு உதவுகிறது. சில ஆய்வுகளில் மதிய உணவைத் தவிர்ப்பதால் நீரிழிவு நோயின் அபாயம் குறைந்து, ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பட உதவும் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மதிய உணவைத் தவிர்ப்பதால் ஒருவரின் மனநிலை மற்றும் ஆற்றல் மேம்படும் என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

மதிய உணவைத் தவிர்ப்பதால் ஏற்படும் தீமைகள் என்று பார்க்கும்போது, இதனால் சிலருக்கு சோர்வு, பலவீனம் மற்றும் எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படலாம். நீண்ட காலத்திற்கு ஒருவர் மதிய உணவை தவிர்த்து வந்தால், அவர்கள் தசை இழப்பை சந்திப்பார்கள். மேலும், இதனால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போவதால், சுகாதார பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மதிய உணவை தவிர்ப்பது, மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிக பசியை ஏற்படுத்தி, அதிகமாக சாப்பிட வழி வகுக்கும். இதனால் உடல் எடை அதிகரிக்கக்கூடும். 

50 வயதைக் கடந்தவர்களுக்கான சில பரிந்துரைகள்: 

50 வயதைக் கடந்த நீங்கள் மதிய உணவைத் தவிர்க்க வேண்டும் என நினைத்தால் முதலில் உங்கள் மருத்துவரிடம் பேசுவது முக்கியம். மதிய உணவை முழுமையாக தவிர்க்க விரும்பினால் கொஞ்சம் கொஞ்சமாக அதைத் தொடங்குங்கள். நாள் முழுவதும் ஆரோக்கியமான சிற்றுண்டிகளை சாப்பிட முற்படுங்கள். 

இத்துடன், தினசரி போதிய அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளவும். நீங்கள் மதிய உணவைத் தவிர்ப்பதால் உங்கள் உடல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கவனிக்கவும். இதனால், ஏதேனும் பிரச்சனை ஏற்படுவது போல் தோன்றினால் உடனடியாக அந்த முயற்சியைக் கைவிடவும். 

50 வயதைக் கடந்தவர்கள் மதிய உணவைத் தவிர்க்க வேண்டுமா? வேண்டாமா? என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட முடிவு. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்கிறது எனில் தாராளமாக கடைப்பிடிக்கலாம். ஆனால், எதை முயற்சிப்பதற்கு முன்பும் உங்கள் மருத்துவரின் ஆலோசனை பேரில் தொடங்குவது நல்லது. இது உங்களது ஆரோக்கியத்திற்கும், ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் நன்மை பயக்கும். 

மாப்பிள்ளை வீடு சென்னை... அதனால போட்டும், துடுப்பும்தான்!

சாம்பியன் ஆஸ்திரேலியாவின் கொட்டத்தை அடக்கிய தென் ஆப்பிரிக்கா!

பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ்: Hot Flashes என்றால் என்ன? கையாள்வது எப்படி?

இந்த சின்னஞ்சிறு காயில் ஒளிந்திருக்கும் சூப்பர் நன்மைகள் தெரியுமா?

குழந்தைகளுக்கு வளர்ச்சி மொழிக் கோளாறு ஏற்படுத்தும் சிக்கல்கள்!

SCROLL FOR NEXT