Is Spirulina good for health? 
ஆரோக்கியம்

Spirulina சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? 

கிரி கணபதி

பழங்காலத்தில் இருந்தே மனிதன் தன் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை பெறுவதற்காக பல்வேறு வகையான உணவுப் பொருட்களை உட்கொண்டு வந்துள்ளான். ஆனால் நவீன உலகில் பலர் தங்கள் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் சரியான அளவில் பெறுவதற்கு சிரமப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் நாம் உட்கொள்ளும் உணவின் தரம் குறைந்து வருவதுதான். இந்த நிலையில் நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தருவதற்கு Spirulina போன்ற சூப்பர் உணவுகள் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கின்றன. 

ஸ்பைருலினா என்பது ஒருவகை நீல பச்சை பாசி ஆகும். இது பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது என்பதால் பல்வேறு வகையான நோய்களை எதிர்த்து போராட உதவும். இந்தப் பதிவில் ஸ்பைருலினாவின் ஊட்டச்சத்து மதிப்பு, அதன் நன்மைகள் மற்றும் அதை எவ்வாறு உட்கொள்ளலாம் என்பது பற்றி விரிவாகக் காணலாம்.

ஸ்பைருலினா என்பது பூமியில் உள்ள மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் ஒன்றாகும். இது புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற பயனுள்ள சேர்மங்கள் நிறைந்தது. தாவரங்களில் கிடைக்கும் மிக உயர்ந்த தரமான புரதங்களில் ஒன்றைக் கொண்டுள்ளது. இது அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் கொண்டுள்ளதால் உடலுக்குத் தேவையான புரதத்தை வழங்குகிறது. 

மேலும், இதில் நிறைந்து காணப்படும் அத்தியாவசிய விட்டமின்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செல்களை பாதுகாக்கவும் உதவும். இதித் உள்ள இரும்பு, கால்சியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் எலும்புகளை வலுப்படுத்தி, ரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. மேலும், இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டின், ஃபைக்கோசயனின் போன்ற கரோட்டினாய்டுகள், புற்றுநோயை தடுக்கவும், கண்பார்வையை மேம்படுத்தவும் உதவும். 

ஸ்பைருலினாவின் ஆரோக்கிய நன்மைகள்: 

ஸ்பைரலினா அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் கொண்டிருப்பதால், இது பல உடல்நலக் குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு ஸ்பைருலினா சிறந்த தேர்வாகும். எடையை இழக்க விரும்புபவர்களுக்கு தேவையான புரதத்தை இது வழங்குகிறது. 

இதை தொடர்ச்சியாக உணவில் சேர்த்துக் கொள்வதால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்பட்டு, அதன் தாக்கம் விரைவில் குறைகிறது. மேலும், இது ரத்த அழுத்தத்தைக் குறைத்து, கொலஸ்ட்ரால் அலவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் இருக்கும் சில சேர்மங்கள் வீக்கத்தை குறைக்கவும், மூட்டு வலியைக் குறைக்கவும் உதவுகின்றன. 

ஸ்பைருலினா, செரட்டோனின் மற்றும் டோப்பமைன் போன்ற மகிழ்ச்சி ஹார்மோன்களை அதிகரித்து மனநிலையை மேம்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. இது சந்தையில் பொடி, மாத்திரை, கேப்சூல் மற்றும் திரவ வடிவில் கிடைக்கிறது. எனவே, உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஸ்மூர்த்தி, சாலட், சூப், நேரடி மாத்திரை என எப்படி வேண்டுமானாலும் உட்கொள்ளலாம். 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

Alia bhatt beauty tips: நடிகை ஆலியா பட் அழகின் ரகசியம் இதுதான்!

6 Super Cool Facts About The Moon!

SCROLL FOR NEXT