Paneer flower decoction helps control diabetes
Paneer flower decoction helps control diabetes https://tamil.webdunia.com
ஆரோக்கியம்

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் பன்னீர் பூ கஷாயம்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

ன்னீர் பூ பார்ப்பதற்கு சுண்டைக்காய் போல் காணப்படும். இது தூக்கமின்மை, நரம்பு தளர்வு, ஆஸ்துமா, நீரிழிவு நோய்களை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது. இது உடலின் இன்சுலின் பயன்பாட்டை சரி செய்கிறது. மூலிகைக் கடைகளில் எளிதாகக் கிடைக்கும் இதில் சிறிது கசப்பு தன்மை உண்டு. ஆயுர்வேத மருத்துவத்தில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

நல்ல தரமான பன்னீர் பூ நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. ஐந்தாறு பன்னீர் பூக்களை எடுத்து அவை முங்கும் அளவு தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் மூடி வைக்கவும். மறுநாள் காலை அந்த நீர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். அந்த நீரை வடித்து எடுத்து அதில் தேன் இரண்டு ஸ்பூன் கலந்து பருகவும்.

இந்த பன்னீர் பூ கஷாயம் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதில் நல்ல வேலை செய்கிறது. கெட்ட கொலஸ்ட்ராலை ஏற்படுத்தும் ட்ரான்ஸ்ஃபேட் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகளை குறைக்கிறது. பன்னீர் பூவில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது இரத்த சக்கரை அளவை குறைக்க உதவும். கல்லீரல் அதிக சர்க்கரையை உற்பத்தி செய்வதைத் தடுக்கும்.

உடலுக்கு உடற்பயிற்சியின்மை அல்லது அதிக உடற்பயிற்சி, மன அழுத்தம், வயது காரணமாக உடலில் ஏற்படும் வலியை இந்த பன்னீர் பூ குறைக்க வல்லது. மேலும், உடலில் ஏற்படும் காயங்களை வேகமாக குணமடைய செய்யவும், நோய் எதிர்ப்பு சக்தி ஊக்கியாகவும், நல்ல தூக்கத்தைக் கொடுக்கவும் உதவுகிறது. தூங்குவதற்கு முன் ஒரு மணி நேரத்திற்கு முன் பன்னீர் பூ பானத்தை உட்கொள்வது நல்ல தூக்கத்தை உண்டாக்கும்.

வெறும் வயிற்றில் பன்னீர் பூ கஷாயம் பருக, வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், எடை இழப்பை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இதனால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறைகிறது. இந்த கஷாயத்தை தேனுடன் பருக, இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது.

பன்னீர் பூ கணையத்தில் உள்ள பீட்டா செல்களை குணப்படுத்தி இன்சுலின் பயன்பாட்டை சரி செய்கிறது. இது பீட்டா செல்களை சரி செய்வது மட்டுமல்லாமல், சரியான அளவில் இன்சுலின் சுரப்பதற்கும் உதவுகிறது.

ஆண்கள் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? 

ஒரே நாளில் மூன்று கோலத்தில் காட்சி தரும் அதிசய முருகன் கோயில்!

சிறுகதை - முகம் மாறு தோற்றப் பிழை!

Paitkar Painting: ஜார்க்கண்டின் பாரம்பரிய ஓவியமான பைட்கர் ஓவியத்தின் சுவாரசியங்கள்!

வெற்றியைத் தடுக்கும் பயத்தை உதறித் தள்ளுங்கள்!

SCROLL FOR NEXT