Passiflora foetida 
ஆரோக்கியம்

பல பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது பூனைக்காலி பழம்!

சங்கீதா

நம்மை சுற்றி ஏராளமான மருத்துவ குணம் கொண்ட பல செடிகள் உள்ளன. ஆனால் நாம் பல தாவரங்களை களைச்செடிகளாக மட்டுமே பார்த்து வருகிறோம். நம் முன்னோர்கள் பல மூலிகை செடிகளை ஆராய்ந்து அதன் மருத்துவ பயன்களை குறித்து வைத்துள்ளனர். ஆனால் நாமோ தாவரங்களின் பயன்களை பற்றி அறியாமலேயே சென்றுவிடுகிறோம்.

கிராமப்புறங்களில் அதிகம் காணப்படும் கொடிகளில் ஒன்று தான் இந்த சிறு பூனைக்காலி கொடி. சிறு பூனைக்காலி கொடியில் கிடைக்கும் சிறு பூனைக்காலி பழம் மருத்துவக்குணம் கொண்டது. அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சிறு பூனைக்காலி பழம்:

இந்த கொடியின் இலை பார்ப்பதற்கு பூனை கால் போன்ற வடிவமைப்பை கொண்டது. அதனால் தான் இதை சிறு பூனைக்காலி கொடி என்று அழைக்கிறார்கள். மேலும் சிலர் காட்டுக் கொடித்தோடை அல்லது மொசுக்கட்டான் கொடி என்று அழைப்பார்கள். இதை ஆங்கிலத்தில் (Passiflora foetida, wild maracuja, bush passion fruit) என பல பெயர்களால் அழைப்பார்கள். இலங்கையில் இதை தண்ணீர் சோற்றுப்பழம் என அழைப்பார்கள்.

அமெரிக்கா, மெக்சிகோவை தாயகமாக கொண்டது சிறு பூனைக்காலி பழம். அதன் பிறகு வெப்பமண்டல பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது.

சிறு பூனைக்காலி பழத்தின் பயன்கள்:

கிராமப்புறங்களில் அதிகம் காணப்படும் இந்த பூனைகாலி பழம், வேலியின் மீது படர்ந்து வளரும் கொடியாகும். இந்த காயை சுற்றி மொசு மொசு என்று கூண்டு போல காணப்படும். இந்த காய் பழுத்தால் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இந்த பழத்தின் உள்ளே ஜெல்லி போன்ற சதைகள் இருக்கும். இது சுவைப்பதற்கு இனிப்பாகவும், புளிப்பாகவும் இருக்கும்.

இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் தீராத மலச்சிக்கல் தீர்ந்து விடும். செரிமாணத்திற்கு உகந்த பழமாக பார்க்கப்படுகிறது. 

இந்த பழத்தில் ஃபிளாவனாய்டுகள், கிளைகோசைடுகள், ஆல்கலாய்டுகள் உள்ளதால் உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கிறது.

பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பாக இந்த பழம் உள்ளதால் பல அழகுசாதனப்பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

பாரம்பரிய மருத்துவத்தில் மயக்கம், வயிற்றுப்போக்கு, பதட்டம், கல்லீரல் பிரச்னை, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னை, ஆஸ்துமா, புற்று நோய், தூக்கமின்மை, இரத்த சோகை போன்ற பல பிரச்னைகளுக்கு இந்த பழம் சிறந்த தீர்வாக இருக்கிறது.

மேலும் சிறுபூனைக்காலி பழம் மட்டுமல்லாமல் கொடி முழுவதும் மருத்துவ குணம் கொண்டது. இதன் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து நீரில் சேர்த்து கொதிக்க வைத்து தேன் கலந்து தினமும் காலை சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலிக்கு இந்த பழம் சாப்பிட்டு வருவதால் சிறந்த தீர்வாக இருக்கும். 

சிறு பூனைக்காலி இலையை காலை தேநீர் வைத்து பருகி வர இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறையும். எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த பழமாக உள்ளது.

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT