Kurattai
குறட்டை https://www.seithipunal.com
ஆரோக்கியம்

தூங்கும்போது ஏற்படும் குறட்டையும் நிவாரணமும்!

மகாலெட்சுமி சுப்ரமணியன்

மூக்கில் உள்ள திசுக்களின் அபரித வளர்ச்சி காரணமாக அடிக்கடி சளி பிடித்தல், மூக்கடைப்பு, காது கேளாமை, குறட்டை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் விநியோகம் பாதிக்கப்பட்டு குழந்தைகளின் உடல் வளர்ச்சி பாதிக்கப்படும். அறுவை சிகிச்சை மூலம் இந்த அடினாய்டு சதை வளர்ச்சியை நீக்க முடியும்.

ஈ.என்.டி. தொடர்பான பிரச்னைதான் ‌குறட்டை. மூக்கு முதல் தொண்டை வரை இதன் பாதிப்பு இருக்கும். மூக்கடைப்புதான் இதற்கு முக்கியக் காரணம். மூச்சு உள்ளே போய் வெளியே வருவது தடைப்படுகிறது. இந்த அதிர்வினால் உள்நாக்கும் தடிக்கும்.

பலரும் குறட்டையை ஒரு பிரச்னையாக நினைப்பதில்லை. லேசான அளவில் குறட்டை விடும்போது பிரச்னையில்லை. ஆனால், குறட்டையின் அளவு அதிகரிக்கும்போது அதுவே ஒரு நோயாகி விடும். அதிக உடல் எடை, கழுத்துப் பகுதியில் அதிக சதை, சைனஸ் தொல்லை, மூக்கு, உள்நாக்கு, தொண்டைப் பகுதியில் பிரச்னை, ஆல்கஹால் பழக்கம் உள்ளவர்களுக்கும் குறட்டைப் பிரச்னை ஏற்படும்.

குறட்டையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகலில் எப்பவும் தூக்கம் வரும். மதியம் சாப்பிடும்போது, வண்டி ஓட்டும்போது கூட தூக்கம் வரும். சில சமயம் இரவு தூக்கத்தில் மூச்சு விடவும் மறப்பது உண்டு. இதனால் தூங்கக் கூட பயப்படுவார்கள். இதனால் தூக்கம் கெடும்.

எப்போதும் சோர்வு, அசதி, மறதி, கோபம், எரிச்சல், உணர்ச்சிவசப்படுதல் மன உளைச்சல் இருக்கும். இதைப் போக்க உடல் எடையைக் குறைக்க வேண்டும். மூக்கு, உள்நாக்கு, தொண்டைப் போன்ற பகுதிகளைப் பரிசோதித்து அடைப்புள்ள இடத்தை கண்டறிந்து லேசர் சிகிச்சையின் மூலம் அடைப்பை சரி செய்து விடலாம். சுவாச அடைப்பை சரி செய்து விட்டால் ஆரோக்கியமான, ஆழ்ந்த தூக்கத்தையும், தெளிவான மனநிலையையும் உற்சாகத்தையும் பெறலாம்.

மாற்ற முடியாததை ஏற்றால் கிடைக்கும் மனநிறைவு!

பாத்ரூமில் செய்யப்படும் அழகிய இன்டீரியர் டிசைன் ஐடியாஸ்!

உலகின் மிகவும் மகிழ்ச்சியான விலங்கு இதுதானாம்… இந்த மூஞ்சிய பாருங்களேன்!

ஆளுமை வகைகள் என்றால் என்ன? ஒரு எளிய விளக்கம்! 

பிளாஸ்டிக் சாலைகள்! வழுக்குமோ?

SCROLL FOR NEXT