கோடையின் வெப்ப அலையை சமாளிக்கவும் உடலை நீரேற்றத்துடன் வைக்கவும் நாம் பலவிதமான குளிர்ச்சி தரும் உணவுகளை உட்கொண்டும், வித விதமான பழச் சாறுகளை அருந்தியும் வருகிறோம். அவற்றுள் நம் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன் பல வகையான ஆரோக்கிய நன்மைகளையும் தரக்கூடியது கரும்பு ஜூஸ். கரும்பு ஜூஸிலிருந்து கிடைக்கும் நற்பயன்கள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
கரும்பு ஜூஸில் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச் சத்து, வைட்டமின் A, C, B1, B2, B3, B5, B6 ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. கரும்பு ஜூஸ் குடிப்பதால் உடலின் மொத்த ஆரோக்கியமும் மேம்படும்.
கோடைக் காலங்களில் மேற்கொள்ளும் உடற்பயிற்சிக்குப் பின் கரும்பு ஜூஸ் அருந்துவது உடலை நீரேற்றத்துடன் வைக்க உதவும். வியர்வை மூலம் வெளியேறும் எலக்ட்ரோலைட்களையும் நீர்ச் சத்தையும் மீண்டும் இட்டு நிரப்பக் கூடியது கரும்பு ஜூஸ்.
கரும்பு ஜூஸிலிருக்கும் இயற்கையான இனிப்புச் சத்தானது உடனடி சக்தியைத் தரும். காஃபின் மற்றும் செயற்கை இனிப்பூட்டி இல்லாமலே உடல் சோர்வை நீக்க உதவும். கரும்பு ஜூஸில் உள்ள இயற்கையான என்சைம்கள் சிறப்பான செரிமானத்துக்கு உதவி புரிகின்றன.
கரும்பு ஜூஸில் ஹெபடோப்ரொடெக்டிவ் (Hepato protective) குணம் உள்ளது. இது கல்லீரலில் சிதைவு ஏற்படுவதை தடுக்க உதவும்; கல்லீரலின் இயக்கம் சிறப்பாக நடைபெறவும் உதவும்.
கரும்பு ஜூஸில் உள்ள மல்டிபிள் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உடலின் நோயெதிர்ப்புச் சக்தி வலுவடைய உதவுகின்றன. இதனால் உடலைத் தாக்கும் தொற்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடி ஜெயிக்க உடலுக்கு போதுமான அளவு சக்தி கிடைக்கிறது.
கோடைக் காலத்தில் அனைத்துத் தரப்பினரும் சுலபமாக வாங்கி அருந்தும் விதத்தில் இதன் விலையும் குறைவு. எனவே, அனைவரும் கரும்பு ஜூஸ் அருந்துவோம்; ஆரோக்கியம் பெறுவோம்.