The secret to fixing bone fractures with natural remedies! 
ஆரோக்கியம்

இயற்கை வைத்தியத்தில் எலும்பு முறிவை சரி செய்யும் ரகசியம்!

சேலம் சுபா

ந்தக் காலத்தில் கை, கால் முறிவு ஏற்பட்டால், அருகில் இருக்கும் இயற்கை எலும்பு முறிவு வைத்தியரிடம் அழைத்துச் சென்று தண்ணீர்க்கட்டு, எண்ணெய்க் கட்டு, முட்டைக்கட்டு என இடைவெளி விட்டு விட்டுக் கட்டி குணப்படுத்தி விடுவார்கள். தற்காலத்திலும் ஆங்கில மருத்துவம் பிரபலமாக விளங்கினாலும் இன்றும் புத்தூர் கட்டு பிரபலமாகவே உள்ளது.

எலும்பு முறிவுக்குக் கட்டு கட்டும்போது அரைத்த மூலிகை ஒன்றை வைத்து அதன் மேல் சிறு சிறு மரப்பட்டைகள் வைத்துக் கட்டுவது வழக்கம். அந்த மூலிகை மூலமே எலும்புகள் கூடுகிறது. அதுதான் எலும்பொட்டி இலை. முதுகுத் தண்டு காயங்கள், முறிந்த எலும்புகள், கிழிந்து போன சவ்வுகள், சவ்வு விலகல் போன்ற பாதிப்புகளை இந்த மூலிகையைக் கொண்டு குணமாக்கலாம் என்கிறது மருத்துவக் குறிப்புகள். தற்போது எலும்பொட்டி இலையில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதை ஆய்வுகள் மூலம் அறிந்துள்ளனர்.

எலும்பொட்டி இலை எப்படி இருக்கும்?

வறண்ட பூமியில் வளரும் இது, எப்போதும் பச்சையாக இருக்கும். 6 அடி முதல் 9 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் எதிர் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பூக்கும் இது, விதைகள் மூலம் இனவிருத்தி செய்கிறது. இதன் விதைகள் நீள்வட்ட வடிவத்தில் மண்ணிறத்தில் இருக்கும். இதன் தண்டுகள் முதிர்ந்தால் கடினமாகிவிடும்.இலைகள் முதிர்ந்து பழுத்தால் கருப்பாக இருக்கும். இதன் பூக்கள் மஞ்சள் அல்லது வெண்மையாக இருக்கும். பூக்கள் வாடினால் பசை போன்று இருக்கும்.

அந்தக் காலத்தில் எலும்பு முறிவு வைத்தியர்கள் இந்த இலையை ரகசியமாக உபயோகித்ததால் இதற்கு எலும்பொட்டி இலை என்ற பெயர் வந்திருக்கலாம். எலும்பொட்டி தாவரம் உடைந்த எலும்புகளை ஒட்டக்கூடிய அற்புத மூலிகை மட்டுமல்ல, எலும்புகளை பலமாக்கக் கூடியதும் கூட.

இதை சாறு எடுத்து நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வெளிப்புற வைத்தியத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும், எலும்பொட்டியின் மூலக்கூறுகளை உள்ளுக்குள் நேரடியாக செலுத்தும்போது உடைந்த எலும்புகளை ஒட்ட வைப்பதில் நிவாரணம் கிடைக்கிறதா என்கிற ஆராய்ச்சியிலும் தற்போது நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நமது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே ஆயுர்வேதத்திலும், சித்தர்கள் தங்களது நூல்களிலும் எலும்பொட்டி இலைகள் உடைந்த எலும்புகள் வேகமாக ஒட்டிக்கொள்ள உதவுகின்றன என்று குறிப்பு எழுதி வைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த இலைகள் உடைந்த எலும்புகளின் வீரியத்தை அதிகரித்து சரியாகும் நேரத்தை குறைக்கிறது. எலும்பு முறிவுக்கு பக்க விளைவுகள் இன்றி விரைவில் நிவாரணம் கிடைக்கிறது என்பதால் தற்போது இதன் மீதான கவனம் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, வயதானவர்கள் முதல்  இளையவர் வரை மூட்டு வலியால் பாதிக்கப்படுகின்றனர். சத்துக்களை கிரகிக்கக்கூடிய சக்தியை எலும்புகளுக்கு தந்து வலிக்கு நிவாரணம் தருகிறது இந்த எலும்பொட்டி இலைகள். ஆனால், அறுவை சிகிச்சை இல்லாமல் இயற்கை முறையில் வைத்தியத்துக்கு உதவுமிந்த எலும்பொட்டி இலையை தகுந்த மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதிலும் எச்சரிக்கை தேவை.

பத்தே நிமிடத்தில் சுடச்சுட வெஜ் கட்லெட்டும், சோயா கட்லெட்டும் செய்வோமா?

குழந்தைகளிடம் அடிக்கடி கேள்வி கேட்கும் பெற்றோரா நீங்க? அப்போ இதை நோட் பண்ணிக்கோங்க!

குறுநாவல்: 'அம்புஷ்' அத்தியாயம் - 5

நம் கைகளையும் கொஞ்சம் கவனிப்போமா?

சுவாமி ஐயப்பன் வேட்டையனாக காட்சித்தரும் இடம் எது தெரியுமா?

SCROLL FOR NEXT