Coconut Stem Bg Img credit: Circus Thuppaki
ஆரோக்கியம்

பல நோய்களை தீர்க்கும் அற்புத மருந்து இந்த குருத்து!

ராதா ரமேஷ்

நாம் பயணம் செய்யும்போது சாலையோரங்களில் ஆங்காங்கே தென்னங்குருத்து விற்பதை பார்த்திருப்போம். ஆனால் நமக்கு அதில் உள்ள நன்மைகள் தெரியாததால் அதை கடந்து போய் இருப்போம். தென்னங்குருத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன, அவற்றைப் இப்பதிவில் பார்க்கலாம்.

தென்னை மரங்களை அழிக்கும் போது அதன் அடித்துண்டை வெட்டிப் பார்த்தால் உள்ளே வெண்மையான ஒரு சிறிய தண்டு பகுதி இருக்கும். அதுதான் தென்னங்குருத்து. பெரும்பாலும் மரங்களை அழிக்கும் போது மட்டுமே இதை பெற முடியும் என்பதால் இதை ஒரு அரிய பொருள் என்று கூட சொல்லலாம்.

கேரளா, பொள்ளாச்சி, கரூர், மதுரை போன்ற இடங்களில் அதிகமாகவும் மற்ற இடங்களில் பரவலாகவும் கிடைக்கக்கூடிய ஒரு சத்து மிகுந்த உணவுப் பொருள்தான் இந்த தென்னங்குருத்து. பல நோய்களை தீர்க்கும் அற்புத மருந்தாக இது பயன்படுகிறது.

சிறுநீரக கற்களைக் கரைக்க:

பெரும்பாலும் சிறுநீரக கற்கள் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக வாழைத்தண்டை சாப்பிடுவதே வழக்கம். வாழைத்தண்டு எவ்வளவு பயன் உள்ளதோ அதே அளவுக்கான பயன்கள் தென்னங்குருத்திலும் உள்ளது. சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால் கற்கள் வலியின்றி வெளியேற ஆரம்பிக்கும்.

மஞ்சள் காமாலை:

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோயின் தாக்கம் குறைய தென்னங்குருத்தை தாராளமாக சாப்பிடலாம். மேலும் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிறுநீர் வராமல் அவதிப்படும் போது தென்னங்குருத்தை சாப்பிடுவது உடனடியான பலன்களை கொடுக்கும்.

ஆண்மை குறைவு:

ஆண்கள் தென்னங்குருத்தை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் ஆண்மை குறைவு பிரச்னையில் இருந்து விடுபடுவதற்கு தென்னங்குருத்து உதவுகிறது.

தொண்டை வலி மற்றும் சளி:

குழந்தைகளுக்கு ஏற்படும் தொண்டை வலி மற்றும் சளி ஆகியவற்றை  சரிசெய்வதற்கு தென்னங்குருத்து பயன்படுகிறது. நெஞ்சு சளி கட்டி கொள்ளும் போது அதனை கரைத்து வெளியேற்ற தென்னங்குருத்து மிகச் சிறந்த மருந்தாக இருக்கிறது. தென்னங்குருத்தை மெலிதாக சீவி அதன்மேல் மிளகு தூள் தூவி சாப்பிடலாம்.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகள்:

பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலி மற்றும் தொற்றுக்களை நீக்குவதற்கு தென்னங்குருத்து மிகவும் பயன்படுகிறது. தென்னங்குருத்தை தண்ணீருடன் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து குடித்தால் மாதவிடாய் பிரச்சனைகள் நீங்கும். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று பிடிப்புகளை சரி செய்யவும் இது பயன்படுகிறது.மேலும் கருப்பையில் உள்ள கழிவுகளை வெளியேற்றி கருப்பையை சுத்தம் செய்ய உதவுகிறது. ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை, கருப்பையில் நீர்கட்டி உள்ளவர்கள் இதனை தாராளமாக சாப்பிடலாம். இது நீர் கட்டிகளை குறைக்கும் ஆற்றல் கொண்டது.

மலச்சிக்கல் பிரச்னையை தீர்க்க:

தென்னங்குருத்தில் அதிகமான நார்ச்சத்துக்கள் உள்ளதால் மலச்சிக்கல் தொடர்பான உபாதைகளை போக்கும் வல்லமை உடையது. இது ஜீரண ஆற்றலை மேம்படுத்தி மில  மிளக்கியாக செயல்பட்டு மலச்சிக்கல் பிரச்சனையை   தீர்க்க உதவுகிறது.

வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண்:

வயிற்றுப்புண் தொடர்பான பிரச்சனை உள்ளவர்களும், வாய்ப்புண் தொடர்பான பிரச்சனை உள்ளவர்களும் தென்னாங்குருத்தை  தாராளமாக சாப்பிடலாம். மேலும் குடலில் அதிகமான அமிலச் சுரப்பு உள்ளவர்கள் தென்னாங்குருத்தை சாப்பிடும் போது அது அமிலச்சுரப்பினை கட்டுப்படுத்த உதவுகிறது. தென்னங்குருத்திலிருந்து தினமும் சாறு  எடுத்துக் குடித்தால் அல்சர் நோயை குணப்படுத்த முடியும்.

தைராய்டு மற்றும் நரம்பு தளர்ச்சி:

தைராய்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் இதனைத் தொடர்ந்து சாப்பிடுவதால் நல்ல பலன்களை பெறலாம். மேலும் நரம்புத் தளர்ச்சியை போக்கும் அருமருந்தாகவும் தென்னங்குருத்து பயன்படுகிறது.

தென்னங்குருத்தில் உள்ள சத்துக்கள்:

தென்னங்குருத்தில் விட்டமின் பி, விட்டமின் சி, கால்சியம், ஜிங்க், நார்சத்துக்கள், புரதம், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன.

உடல் சூடு அதிகமாக உள்ளவர்கள் தென்னங்குருத்தை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் உடலின் வெப்பநிலையை சீராக வைக்க முடியும்.

இவ்வளவு அற்புதமான பலன்களை உடைய தென்னங்குருத்தை இனிமேல் எங்கு பார்த்தாலும் மிஸ் பண்ணாம வாங்கி சாப்பிடுங்க மக்களே!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT